அமைச்சர் உதயநிதிக்காக! உதயசூரியன், "உதயத்தை வரவேற்போம்".. கருணாநிதி நினைவிடத்தில் அலங்காரம்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தார். அதற்கு அவர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் எளிமையாக உதயநிதியின் பதவியேற்பு விழா நடந்தது.
முதலில் நாட்டுப் பண் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதையடுத்து அமைச்சராக பொறுப்பேற்கவிருந்த உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

35 ஆவது அமைச்சர்
இதையடுத்து தமிழகத்தின் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி அவருடைய தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரோஜா மலர்களை பரப்பி அதில் கருப்பு சிவப்பு வண்ணங்களால் உதயசூரியன் படம் வரையப்பட்டுள்ளது. அதற்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

உதயத்தை வரவேற்போம்
மேலும் உதயத்தை வரவேற்போம் என வெள்ளை நிற மலர்களால் எழுதப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை வரவேற்போம் என்பதைத்தான் உதயத்தை வரவேற்போம் என குறிப்பிட்டிருந்தனர். கருணாநிதியின் பிறந்தநாள், நினைவுநாள் இல்லாமல் முக்கியமான தருணங்களிலும் அவருடைய சமாதி அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

100 ஆவது பிறந்தநாள்
கருணாநிதி மறைந்து 100 ஆவது நாள் அன்று அவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது மக்களை வகுவாக கவர்ந்தது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை குறிக்க 40-க்கு 40 என மலர் அலங்காரம் செய்திருந்தனர். அதில் நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதி சமாதியில் கோயில்
தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்ற நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்றதொரு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடவுள் மறுப்பு கொள்கை இருந்த போதிலும் கோயில்கள் மீதும் இந்து சமய அறநிலையத் துறை மீதும் தனி கவனம் செலுத்தியவர் கருணாநிதி. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர். பல கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள், கோயில்களை புனரமைப்பது போன்ற திட்டங்களை செய்திருந்தவர். ஒரு முறை கருணாநிதியின் சமாதி வங்கக் கடல் போல் காட்சி அளித்தது. கருணாநிதியின் 4ஆவது நினைவு ஆண்டு விழாவை யொட்டி அவரது சமாதியில் கருப்பு கண்ணாடியும் இங்க் முனை கொண்ட பேனாவும் வைக்கப்பட்டிருந்தது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications