கருணாஸ் திருப்பி போட்ட தோசை.. திமுக கிட்ட 1 சீட்டுக்காக அபத்தம்.. விஜய்யை இப்படியா சொல்றது: பிரபலம்
சென்னை: கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்து விஜய் பேசப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய் அப்படி செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். அதையும் மீறி விஜய் செய்தார் என்றால், அவரே அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு முடிவுரை எழுதிவிட்டது போலத்தான் என்று கருத்து கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.
Citi Fox Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, "பனையூரில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து விஜய் சந்திக்க போவதாக செய்திகள் வெளியாகின்றன.. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவுதான்..

ஏனென்றால், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தும்போது, அவர்களுடைய பிரதிநிதிகளை பனையூருக்கு அழைத்து சந்தித்திருந்தார்.. அதுவே அப்போது மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்திருந்தது..
அதேபோல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் இதுபோலவே பனையூர் ஆபீசுக்கு வரவழைத்து சந்தித்து பேசினார்.. அதுவும் விமர்சனத்துக்குரியதாக மாறியது.. இந்த இரு சம்பவத்துக்கு பிறகுதான் பனையூர் பண்ணையார் என்ற அடைமொழியும் விஜய்க்கு திமுக இணைய கூலிப்படையில் கிண்டல் செய்ததை அனைவருமே பார்த்தோம்.
பனையூரில் சந்திப்பு?
எனவே இந்த முறை மீண்டும் அப்படி செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். அதையும் மீறி விஜய் செய்தார் என்றால், அவரே அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு முடிவுரை எழுதிவிட்டது போலத்தான்.
அதேபோல அவர் கரூர் செல்வதற்கும் மிகப்பெரிய சிக்கல்கள் உள்ளன.. கரூருக்கு இதுவரை போகாமல் உள்ளதை வைத்து, விஜய் அரசியலுக்கு லாயக்கு இல்லை என்று பலரும் பேசிவருகிறார்கள்.. ஆனால், இந்த விவகாரத்தை விஜயின் இடத்திலிருந்து பார்த்தால்தான் பல உண்மைகள் தெரியும்..
நான்கூட ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.. அதாவது கரூர் செல்வதற்கான காவல்துறையிடம் அனுமதி கேட்டு, அதற்கான முன்னெடுப்புகளை விஜய் செய்து கொண்டிருக்கும்போதே, மற்றொருபுறம் சிபிஐ விசாரணைக்கான உத்தரவும் வந்துவிட்டது.
சிபிஐ ஆபீசரிடம் பேசினாரா
அப்போது விஜய்யிடம் சிலர், சிபிஐ விசாரணை கரூரில் நடக்கும்போது அங்கு சென்றால், அவர்களின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவர்களின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும் என்று அதனால், கரூர் வருவதை பற்றி சிபிஐ அதிகாரிகளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்களாம்.
உடனே விஜய்யும், சிபிஐ அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசினாராம்.. அதற்கு சிபிஐ அதிகாரிகளும், எங்களது விசாரணை நடக்கும்போது கரூர் வரவேண்டாம் என்று வாய்மொழி உத்தரவாக விஜய்யிடம் சொன்னார்களாம். இதுவும்கூட, கரூர் செல்ல தாமதமாவதற்கு காரணமாக இருக்கலாம்.
நிச்சயம் சந்திப்பார்
எனவே ஒரு பொதுவான இடத்தில் அவர்களை வரவழைத்து பேசலாம் என்றுகூட விஜய் தரப்பில் யோசித்திருக்கலாம்.. மேலும், இதுவரை கரூருக்கு விஜய் செல்லாமலேயே உள்ளது மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று வருவதால், பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து பேச வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இப்படியெல்லாம் செய்திகள் கசிகின்றன..
மேலும் கரூர் செல்லவே விஜய் பயப்படுவதாக கட்டுக்கதைகளை கிளப்பி வருகிறார்கள்.. விஜய் அப்படிப்பட்டவர் கிடையாது.. வீடியோகாலில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியதுடன், 20 லட்சம் தந்ததுடன், விரைவில் நேரில் சந்திப்பதாகவும் உறுதி தந்துள்ளார்.. எனவே நிச்சயம் அம்மக்களை சந்திப்பார்.
கருணாஸ் விமர்சனம்
விஜய்யை விமர்சித்துள்ள கருணாஸை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை.. விஜய்யை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.. ஆனால், விஜய்யை விமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் உள்நோக்கம் என்ன? இன்று விஜய்யை விமர்சிக்க காரணம் என்ன? என்பதையும் கவனிக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்று பேச முடியும்..
கருணாஸ் ஒரு காமெடி நடிகர்.. ஓரளவு வளர்ந்ததுமே, தன்னை தேவர் சமூகத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்தி, சசிகலா மூலமாக ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்து, அவர் மூலமாக சீட்டை வாங்கி, தேர்தலில் நின்று எம்எல்ஏவானவர். அவர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் எல்லாமே ஸ்டாலினுக்கு எதிராக பேசியவர்தான்..
ஒரு சீட்டுக்காகத்தான்
தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் ஸ்டாலினை விமர்சனம் செய்தவர்தான் கருணாஸ்.. பிறகு எடப்பாடி பழனிசாமி கருணாஸை ஒரு மனிதராகவே கண்டுக்கல.. இதனால் கருணாஸ், திமுகவுக்கு ஆதரவு மனப்பான்மையை எடுத்துவிட்டார். இப்போது விஜய்யை விமர்சிப்பதால் வரப்போகும் தேர்தலில் ஒரு சீட்டை திமுக தனக்கு தந்துவிடும் என்று கணக்கு போடுகிறார்.
தற்சமயம் மற்ற அரசியல்வாதிகளுக்கும், விஜய்க்கும் ஒரு வித்தியாசம் சினிமாக்களில் ஒன்றாக நடித்தபோதும், விஜய்யை பற்றி நன்றாக தெரிந்தும், கருணாஸ் இப்படி பேசுகிறார் என்றால், திமுக மூலமாக ஒரு சீட் கிடைக்கும் என்ற எண்ணத்தினால்தான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி!












Click it and Unblock the Notifications