Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் + கோயம்பேடு + செங்கல்பட்டு.. இனி சென்னை செல்வது செம ஈஸி.. தமிழ்நாடு அரசின் மாஸ் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு பயணம் செய்யும் மக்களுக்கு வசதியாக 3 புதிய பேருந்துகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையங்கள் அடுத்தடுத்து திறக்கப்பட உள்ளன.

சென்னையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்தான். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை.

Kilamakkam + Koyembedu + Chengalpattu: Chennai to get 3 new Bus Stands soon

இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.

இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

விரைவில் திறப்பு: இதனால் முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திலிருந்து படிப்படியாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

Kilamakkam + Koyembedu + Chengalpattu: Chennai to get 3 new Bus Stands soon

சிஎம்டிஏ அதிகாரிகள் முதலில் கிளாம்பாக்கத்தில் இருந்து தெற்குப் பகுதிக்குகளுக்கு பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து வேலூர் போன்ற மாநிலத்தின் வடக்குப் பகுதிகளுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

கோயம்பேடு புதிய பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் விரைவில் கோயம்பேட்டிலும் புதிய பேருந்து நிலையம் ஒன்று திறக்கப்பட உள்ளது.சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலையத்திற்கு அருகே இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை எல்லாம் பேருந்து நிலையங்களுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதாவது சென்னையின் எந்த பகுதியில் இருந்தும் மெட்ரோவிற்கு எளிதாக செல்ல வழி செல்லும் வகையில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் சென்னையில் இரண்டாம் கட்டமாக கட்டப்படும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் ஏற்கனவே கோயம்பேடு ரூட்டில் உள்ள மெட்ரோ நிலையங்களை எளிதாக இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

தற்போது கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கும் அரும்பாக்கத்திற்கும் இடையில் 2.5 ஏக்கரில் இந்த இணைப்பு பேருந்து நிலையம் அமைக்கப்படும். மக்கள் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மெட்ரோவிற்கு வருவதற்கு வசதியாக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு வசதியாக மெட்ரோ அருகே மெட்ரோ மூலம் இந்த பேருந்து நிலையம்ஜ் அமைக்கப்பட உள்ளது. வரும் காலங்களில் இன்னும் சில மெட்ரோ நிலையங்களுக்கு அருகே பேருந்து நிலையம் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் இதேபோல் மெட்ரோவிற்கு மேல் பேருந்து நிலையங்கள் இருக்கும். அதே ஸ்டைலில் இந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Kilamakkam + Koyembedu + Chengalpattu: Chennai to get 3 new Bus Stands soon

செங்கல்பட்டு : எனக்கு கிளாம்பாக்கமும் வேண்டாம், கோயம்பேடும் வேண்டாம் என்பவர்களுக்காக செங்கம்பட்டிலேயே இன்னொரு பெரிய பேருந்து நிலையமும் அமைக்கப்படுகிறது. அதன்படி செங்கல்பட்டில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

வெண்பாக்கம் ஊராட்சி அருகே 14 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 14 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் நாற்பத்தாறு பேருந்துகள் நிறுத்த முடியும். இல்லையென்றால் கூடுதல் 69 பேருந்து நிறுத்தும் வகையில் நிழற்குடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 782 இரு சக்கர வாகனங்கள் பார்க் செய்ய இடவசதி உள்ளது. இங்கு முப்பது கடைகளும் அமைக்கப்படும். பயணிகள் சிரமமின்றி பயணிக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிட்டி உள்ளே வர விரும்பாதவர்கள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+