Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் கிராப் மாறுதே.. இதென்ன புதுஸ்ஸா கிளம்பிருச்சு? தமிழக அரசின் ஸ்மார்ட் ஒர்க்.. படுவேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாகி உள்ள நிலையில், விரைவில் பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், அரசியல் ரீதியாகவும் இந்த பிரச்சனை வெடித்து கிளம்பி உள்ளது.

கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இதையடுத்து, கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 Kilambakkam Bus Terminus and Who is responsible for the Kilambakkam bus terminal not being opened

மழைநீர் வடிகால்: காரணம், "புதிதாக கட்டப்பட்டுவரும் கிளாம்பாக்கம் பஸ் முனையம், போக்குவரத்தை கணக்கில் கொள்ளாமலும், மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாகச் செய்யப்படவில்லை. சிறுமழைக்கே பெருமளவிலான நீர் தேங்குகிறது" என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்றாற்போல, சமீபத்தில் பெய்த மழையால், இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. கட்டுமான பணிகளின்போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது..

எனவே, தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.. அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.. மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் நிறைவடையாமல் இருக்கிறது.

பஸ் நிறுத்தம்: இந்த பணிகள் அநேகமாக இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.. மற்றொருபுறம், ஆம்னி பஸ் நிறுத்தம் விவகாரம் விஷயத்திலும், அரசு சுமூக முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இது தொடர்பான ஆய்வுப்பணிகளும் வேகம் எடுத்து வருவதால், பஸ் முனையம் திறப்பது தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் சேகர்பாபு கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "கொஞ்சம் மழை வந்தாலும், இடுப்பளவு மழைநீர் தேங்குவதால், மழைநீர் வடிகால்வாய் அமைக்க 13 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..

கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டதால், ஒதுக்கீடு செய்ததைவிட கூடுதலாக 25 சதவிகித தொகையைச் செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும்" என்றார்.
கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிடப்படவில்லை என்று சேகர்பாபு சொன்ன குற்றச்சாட்டை அதிமுக தரப்பில் மறுக்கிறார்கள்... அதிமுகதான் காரணம் என்றால், ஆட்சிக்கு வந்தபோதே சொல்லியிருக்க வேண்டியதுதானே? 2 வருடம் கழித்து, இப்போது வந்து கடந்த கால ஆட்சியை குறை சொல்கிறார்கள். மழைநீர் வடிகாலை எப்போது ஆரம்பித்தார்கள்? இந்த வருடம்தான் துவங்கினார்கள்.. அடிப்படை வசதியையே, காலதாமதமாக ஆரம்பித்துவிட்டு, அதிமுகவின் திட்டமிடுதலை எப்படி குறை சொல்லலாம்?

ஆய்வுக்கூட்டங்கள்: கிளாம்பாக்கம் பஸ் முனையம் தொடர்பாக எத்தனையோ ஆய்வுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.. அந்த ஆய்வுக்கூட்டங்களின்படி, என்னென்ன செய்தார்கள்? இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தால், என்றோ பஸ் முனையம் திறக்கப்பட்டிருக்கும்" என்கிறார்கள் அதிமுக தரப்பில்.

மழைநீர்கால்வாய் போன்ற நடைமுறை சிக்கல்களையும் தாண்டி, அரசியல் ரீதியாகவும், எதிரொலிக்க துவங்கியிருக்கிறது கிளாம்பாக்கம் பஸ் முனையம்.. இந்த பஸ் முனையம் மட்டும் வந்துவிட்டால், கோயம்பேட்டுக்கு தற்போது வந்துசெல்லும் 60% பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

அத்துடன், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி , வடபழனி, கோயம்பேடு வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்றும் நம்பப்படுகிறது. அதிலும், கிண்டி கத்திபாரா தொடங்கி ஏர்போர்ட் பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூரில் சாயங்கால நேரத்தில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் வெகுவாகவே குறையும் என்பதால், வாகன ஓட்டிகள் பெருத்த ஆவலுடன் உள்ளனர்..

அரசியல் பிரச்சனை: அதுமட்டுமல்லாமல், இந்த பேருந்து முனையம் திறக்கப்பட்டால், சென்னைக்கே ஒரு வரப்பிரசாதமாகவும் அமையும்.. இப்படிப்பட்ட சூழலில், கட்டுமான கோளாறுகளுக்கு அதிமுக காரணமா? திமுக காரணமா? என்ற விவாதம் கிளம்பியிருப்பது பரபரப்பையும் தாண்டி, எப்போதுதான் இந்த பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+