கட்சியில் சேர்ந்து 3 நாட்களிலேயே வேட்பாளர் நேர்காணல் நடத்திய கோவை சரளா..!
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து 3 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் வேட்பாளர் நேர்காணலில் கோவை சரளாவை கமல்ஹாசன் உட்கார வைத்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா சேர்ந்து மூன்று நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆனால் முப்பது ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளதைப் போல் வேட்பாளர்களை நேர்காணல் நடத்தும் குழுவில் இடம்பிடித்துவிட்டார் கோவை சரளா.

மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கியுள்ளார் கமல். தனக்கு உதவியாக ஊடகவியலாளர் மதன், கல்வியாளர்கள், உள்ளிட்ட குழுவையும் கமல் நேர்காணல் நடத்தும் போது தன்னுடன் அமர வைத்துள்ளார்.
அந்தக் குழுவில் மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த கோவை சரளாவும் இடம்பிடித்தது தான் கமல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இதுவரை நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி முடித்து நல்ல நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் எனக் கூறப்படுகிறது.
வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல ஜாதி என்ன, எவ்வளவு செலவழிப்பீங்க, ஜெயிப்பீங்களா என்று மொக்கையாக கேள்வி கேட்டு கடுப்படிக்காமல் வித்தியாமான முறையில் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்காகவே அவரது கட்சி வேட்பாளர்கள் குறித்து அறிய மக்களிடையே தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications