நடுங்கிப்போன நங்கநல்லூர்.. இதுதான் சென்னையோட பெரிய தேவை.. குமரகுருபரன் ஐஏஎஸ் வந்ததும்.. அசத்துறாரே
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கே மக்களை கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பிரேதப் பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபீஸ் வெறிநாய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல இடங்களில் நாய்கள் குழந்தைகளை கடித்து வந்தன.
ராட்வீலர்: கடந்த மே மாதம் கூட சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.
ஸ்டாலின் மாற்றம்: இந்த நிலையில்தான் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார். நாய்க்கடி விவகாரம் மற்றும் சென்னையில் மாடுகள் தொல்லை விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது.
முக்கியமான சென்னை நங்கநல்லூர் பகுதியில் மாடுகள் உலா வரும் விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 9 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கிடங்கில் அடைக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கரணையில் இருந்து 2 மாடுகளை பிடித்து பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் கால்நடைகள் தேடி பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
ஜே. குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., நல்ல அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டு அனுபவ இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். 19 வருட ஆட்சியில் முதல் 4-5 வருடங்கள் திமுக ஆட்சிக்கு கீழ்தான் இவர் ட்ரெயினிங் எடுத்தார்.
அதன்பின் பல்வேறு துறைகளில் இவர் செயலாளர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இவர் பதவி ஏற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து மாறிய நிலையில் குமரகுருபரன் பதவியேற்றுள்ளார்.
மாற்றம்: சமீபத்தில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications