தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் இதுவா! பெயரை கேட்டா ஆச்சர்யப்படுவீங்க! டாப் 10 பட்டியல்
சென்னை: இந்தியாவில் தமிழ்நாடு 11வது பெரிய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் அளவில் மிகப்பெரியது எது என்று பலருக்கும் கேள்வியாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக திண்டுக்கல் இருக்கிறது. இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 6266 சதுர கி.மீ. வரலாற்று ரீதியாக இந்த மாவட்டம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த மாவட்டம் திப்பு சுல்தானின் தந்தையான ஹைதர் அலியின் ராணுவ தளமாக இருந்தது. பிரிட்டிஷ்காரர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த வேலுநாச்சியாருக்கு திண்டுக்கல்லில் ஹைதர் அலி அடைக்கலம் கொடுத்தார். இதன் மூலம் இந்த மாவட்டம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.

திண்டுக்கல்லும், திருநெல்வேலியும்
திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாவட்டமாக திருநெல்வேலி இருக்கிறது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருக்கிறது. 6,810 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த மாவட்டம் முழுவதும் வேளாண் தொழில் பரவலாக இருக்கிறது. கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நாகரிக மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருநெல்வேலியை தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் திருவண்ணாமலை இருக்கிறது. வடமாவட்டங்களில் நெல் உற்பத்தி செழிப்பாக இருக்கும் மாவட்டம் திருவண்ணாமலைதான். 6,191 சதுர கி.மீ அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள அண்ணாமலையார் ஆலயத்தை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலையை தொண்டைமான் இளந்திரையன் ஆண்டதாக பரிபாடலில் குறிப்பு இருக்கிறது.
வேலூரும் சுதந்திர போராட்டமும்
தமிழ்நாட்டின் நான்காவது பெரிய நகரமாக வேலூர் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை உள்ளடக்கியதாக இது இருந்தது. இன்று 6,050 சதுர கி.மீ பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த மாவட்டம் இந்தியாவின் மிக முக்கியமான மாவட்டமாகும். இங்குள்ள கோட்டையில், இந்தியாவின் முதல் சுதந்திர போருக்கான கிளர்ச்சி 1806ல் நடந்தது. இன்று சிஎம்சி மருத்துவ கல்லூரி வேலூரின் மிக முக்கிய அடையாளமாக மாறியிருக்கிறது.
ஈரோடு
ஐந்தாவது இடத்தில் ஈரோடு இருக்கிறது. ஈரோடு என்றாலே ஜமக்காளம், மஞ்சளும்தான் நியாபகத்திற்கு வரும். 5,237 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த மாவட்டம் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்டதாகும். அதேபோல திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டின் 6வது மிகப்பெரிய மாவட்டமாக இருக்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5187 சதுர கி.மீ ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்த மாவட்டம் அதிக அளவில் பங்களிப்பை கொடுத்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
கிருஷ்ணகிரி
5,129 சதுர கி.மீ பரப்பளவுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் அதிகம் என்பதால் அது சார்ந்த பொருளாதாரத்தை இம்மாவட்டம் கொண்டிருக்கிறது. பெங்களூருக்கு பக்கத்தில் இருப்பதாலும், இம்மாவட்டத்தில் ஓசூர் இருப்பதாலும் தொழில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது.
கோயம்புத்தூர்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் 9வது மிகப்பெரிய மாவட்டமாக இருக்கிறது. நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கோவை, 4850 சதுர கி.மீ பரப்பளவை கொண்டிருக்கிறது. என்னதான் பரப்பளவில் 9வது மாவட்டமாக இருந்தாலும், மக்கள் தொகையின் அடிப்படையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவைதான் இருக்கிறது.
இறுதியாக 4745 சதுர கி.மீ பரப்பளவுடன் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் 10வது மிகப்பெரிய மாவட்டமாக இருக்கிறது. தூத்துக்குடி என்றாலே உப்புதான். கொற்கை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் தமிழர்களின் பெருமை உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. இந்த இடங்கள் எல்லாம் தூத்துக்குடியில்தான் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications