சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுங்கையூர்: நைட் 11 மணியிலிருந்து மறுநாள் வரை ஷிப்ட் போட்டு அடிச்சாங்க.. சட்டக் கல்லூரி மாணவர்

Google Oneindia Tamil News

சென்னை: இரவு 11 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை ஷிப்ட் போட்டு ஒவ்வொரு போலீஸ்காரரா என்னை அடித்தார்கள் என கொடுங்கையூர் கொடூரம் குறித்து சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி சிறுநீர் கழித்த குற்றச்சாட்டு.. போலீஸார் 9 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

    இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில் நான் சட்டக் கல்லூரி மாணவர், என்னோட கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் பகுதி நேரமா மெடிக்கல் ஷாப் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். கொரோனா ஆரம்பித்ததில் இருந்து கல்லூரி முழு நேரமா இயங்காததால் கிட்டத்தட்ட நானும் முழு நேரமா மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

    பொங்கல் பண்டிகை அன்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன். நான் மாஸ்க்கை அணிந்து கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை வழி மறித்த போலீஸார், எங்களை பார்த்ததும் மாஸ்க் போட்டாய். எனவே மாஸ்க் போடாததுக்கு அபராதம் கட்டிட்டு போ என சொன்னார்கள்.

    சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி சிறுநீர் கழித்த குற்றச்சாட்டு.. போலீஸார் 9 பேர் மீது பாய்ந்தது வழக்கு! சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி சிறுநீர் கழித்த குற்றச்சாட்டு.. போலீஸார் 9 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

    ரூ 200 ஊதியம்

    ரூ 200 ஊதியம்

    ரூ 1500 அபராதம் கேட்டாங்க. எனக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளம் கிடைப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கும் போது நான் தப்பே செய்யாமல் ரூ 1500 ஐ எப்படி கொடுக்க முடியும் என நான் நினைத்தேன். இதையே அவர்களிடமும் கேட்டேன். அப்போது நீ என்ன சட்டம் பேசுறியா என கேட்டார்கள். அதற்கு நான் நிஜமாகவே சட்டக் கல்லூரி மாணவர்தான் சார் என்றேன். ஆனால் அதுக்குள்ள என்னை அடிக்க வந்துட்டாங்க.

    அடித்து கொடுமை

    அடித்து கொடுமை

    நான் அதை தடுத்தேன். ஏதோ நானும் அவர்களை அடிக்க வர்றதா என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கயும் அடிக்க தொடங்கிவிட்டாங்க. ஒவ்வொரு போலீஸ்காரரா என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அன்றைக்கு நைட் 11 மணிக்கு அடிக்க ஆரம்பிச்சு, மறுநாள் அதிகாலை வரை அடித்தார்கள்.

    கொடுமை

    கொடுமை

    பின்னர் என்னை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போய் தையல் போட்டுவிட்டு மறுபடியும் ஸ்டேஷனுக்கு கொண்டு போனாங்க. அங்கயும் என்னை கொடுமை செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால் போலீஸார் அடித்து கொடுமைப்படுத்தியதாக நான் சொன்னதை அங்கிருந்தவர்களும் சரியாக கேட்கவில்லை. என்னை 15 நாட்கள் ரிமாண்டில் வைக்குமாறு தீர்ப்பு சொன்னாங்க.

    மனித உரிமை ஆணையம்

    மனித உரிமை ஆணையம்

    எனக்கு உடல்வலி, வேதனை என்னால இயல்பா இருக்க முடியலை. அதனால்தான் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டேன். அவர்களிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். எந்த தவறுமே செய்யாத என் வாழ்க்கையோட நிம்மதியே போயிடுச்சி. அதுதான் என்னோட வருத்தம். இதெல்லாம் எங்க போய் முடியுமோனு எனக்கு தெரியவில்லை என்றார்.

    English summary
    Law college student says that he was beaten by Police from night 11 to next day early morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X