Earned Leave-ஐ பணமாக பெறும் நடைமுறை மீண்டும் அமல்.. யார் யார் எப்போது பணப்பலன் பெறலாம்?
சென்னை: 2025 அக்டோபர் 1 முதல் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக்கு புதிய திட்டமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காலகட்டத்தில், நாடே முடங்கியிருந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 27.4.2020 முதல் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் தமிழக அரசு நிறுத்தியது. இந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து அரசு ஊழியர்கள் எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அதில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்தும் பணப்பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட காலக்கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications