இனி இவி வாகனங்கள் வாங்குவது ரொம்ப ஈசி போலயே.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
சென்னை: நாடு முழுக்க இவி பேட்டரிகள் தயாரிக்க சலுகைகள் வழங்கப்படும், லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து செய்யப்படும், மின்சார வாகனம் மற்றும் மொபைல் போன்களுக்காக தயாரிக்கப்படும் பேட்டரிகளுக்கு உற்பத்தி வரி சலுகை வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இன்று மத்திய பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும். வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது.

அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது . Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்படுகிறது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. 2047க்குள் 10 ஜிகாவாட் அணுசக்தி உலைகளை உருவாக்குவோம்,. அணுசக்தி சட்டத்தில் இதற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்படும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5 சிறிய அணுஉலைகள் 2033க்குள் செயல்படத் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படும். பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும், பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும்.
இளைஞர்கள் முன்னேற்றம், விவசாயம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிப்பு; வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைப்பு செய்யப்படும்.
இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது
ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.












Click it and Unblock the Notifications