சென்னை வந்தார் ஜெ.பி.நட்டா.. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு! இரவில் இறுதியாகும் கூட்டணி
சென்னை; இன்று ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ஜெ.பி நட்டா சென்னை வந்தார்.
சென்னையில் ஜெ.பி.நட்டா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையின் விவரம், தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது போக இன்று மாலை மின்ட் தெருவில் பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.
மாலை 7 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் ஹார்பர் தொகுதியில் நடக்க உள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் முக்கிய தலைவர்களை சந்தித்துவிட்டு இன்றே இரவே டெல்லி திரும்புகிறார் . பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருவதையொட்டி, 39 தொகுதிகளின் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையும், பொதுக்கூட்டமும் 11-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி சென்னையில் பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தனம் ஆகிய 3 இடங்களில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, போக்குவரத்து போலீஸாரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்: ஆனால், இந்த 3 இடங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி, சென்னை காவல்துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஏற்கனவே மெட்ரோ பணிகள் நடப்பதால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஷெனாய் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு பாஜக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செயின்ட் ஜார்ஜ்: இறுதியில் பொதுக்கூட்டத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடத்த கடைசியில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் அனுமதியும் பெறப்பட்டது. இந்த நிலையில், அமைந்தகரைக்குப் பதிலாக மின்ட் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்டார் . இதையடுத்து போலீஸ் அனுமதி பெற்று அங்கே கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பாஜக மூன்றாவது அணி; இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.
பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.
மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
விரும்பவில்லை; லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கி இருக்கும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் உருவாக்கப்படும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லையாம்.
இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று சென்னை வந்தர். தனி விமானத்தில் சென்னை வந்திறங்கிய ஜெ.பி நட்டாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி பிப்.25-ம் தேதி சென்னை வருகை புரிய உள்ளார். அதற்கு முன்பாக நட்டா கூட்டணியை இறுதி செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications