அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா?
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளார். இதனால் பாஜக கட்சிக்குள் தற்போது பெரிய பரபரப்பு ஏற்பட்ட இருக்கிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது. தினமும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகுமா என்று பெரிய எதிர்பார்ப்பில் பாஜக உறுப்பினர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை வரை எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

எங்கு போட்டி
அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர்களின் பெயர்கள்தான் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

யார் வெளியிட வேண்டும்
பொதுவாக வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய தலைமைதான் அறிவிக்கும். அதன்படி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த பட்டியலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எச்.ராஜா அறிவித்தார்
இந்த நிலையில்தான் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார் என்று கூறினார்.

ஏன் பரபரப்பு
எச்.ராஜாவின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமை அறிவிக்காமல் முந்திக்கொண்டு எச்.ராஜா இப்படி அறிவித்தது சரியா என்று கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரே இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன்
இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியானதை பார்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிர்ச்சியில் இருக்கிறார். நாம் வெளியிடும் முன் பட்டியல் வெளியாகிவிட்டதே என்று கோபத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications