லோக்சபா தேர்தல்.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு.. அதிமுக சார்பில் போட்டியிட முடிவு!
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. லோக் சபா தேர்தலில் வெவ்வேறு பணிகளை செய்வதற்காக மூன்று புதிய குழுக்களை அதிமுக கட்சி உருவாக்கி இருக்கிறது.

அதேபோல் அதிமுக மிகவும் ரகசியமாக சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் நேற்றில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வரிசையாக பலர் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார். ஆனால் இவர் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இவர் அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார்.
இவர் பெரும்பாலும் தேனி அல்லது அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த மனுக்கள் மீதான முடிவு வரும் 10ம் தேதிக்கு பிறகே எடுக்கப்படும். கூட்டணி அறிவிப்பு வெளியான பின்பே அதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
அதிமுகவில் நேற்றும் இன்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள்தான் அதிக மனுக்கள் அளித்தனர். இன்று காலையில் இருந்து 20க்கும் அதிகமானோர் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications