சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்.. வாய்ப்பு இனி வராது.. தினகரனை நம்பி ஏமாந்த ஸ்டாலின்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நம்பி, திமுக தலைவர் ஸ்டாலின் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: பரிதாபம்!..ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக- வீடியோ

    சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நம்பி, திமுக தலைவர் ஸ்டாலின் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இதுவரை வெளியான முடிவுகளில் எல்லாம் பாஜக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது.

    முக்கியமாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பலம் பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வேறு விதமாக எதிரொலித்துள்ளது.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் 36ல் திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது. ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் 22ல் 8ல் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால், அதிமுக ஆட்சிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. அதிமுக ஆட்சி பெரும்பான்மை பெற்று தொடரும்.

    மிக மோசம்

    மிக மோசம்

    அதிமுக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அமமுக அதிக அளவில் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. அதிமுக வாக்குகளை அமமுக பிரிந்து இருந்தாலும், வெற்றிகளை மாற்றும் அளவிற்கு எந்த மாயமும் நடக்கவில்லை.

    கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக! கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக!

    சில இடங்களில் மோசம்

    சில இடங்களில் மோசம்

    இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் சில இடங்களில் அமமுக நான்காம் இடம், ஐந்தாம் இடம் கூட வாங்கி இருக்கிறது. இதனால் அமமுக பெரிய அளவில் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கவில்லை. தினகரன் இங்கு சுதாரிக்காமல் போனது, திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக வருத்தம்

    திமுக வருத்தம்

    தினகரன் அதிமுக ஆட்சியை கவிழ்க்க உதவுவார் என்று ஸ்டாலின் நம்பிக் கொண்டு இருந்தார். ஆனால் தினகரன் மீது ஸ்டாலின் வைத்திருந்த நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இனி ஆட்சி காலம் முடியும் வரையில் அதிமுக பிரச்சனை இல்லாமல் ஆட்சி செய்ய முடியும். திமுகவும், அமமுகவும் தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

    திருச்சியை திணறடித்த நாம் தமிழர், மநீம.. கூட சேர்ந்து வெளுத்த அமமுக.. அதிர்ச்சியில் திருச்சியை திணறடித்த நாம் தமிழர், மநீம.. கூட சேர்ந்து வெளுத்த அமமுக.. அதிர்ச்சியில் "பெருசுகள்"

    English summary
    Lok Sabha Elections Results 2019: M K Stalin failed to seek the opportunity due to TTV Dinakaran's flop show.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X