சீல் வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்! அடுத்துதான் முக்கியம்! சிசிடிவி + 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அதிலும் குறிப்பாக நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
வாக்களிக்கலாம்: வழக்கம் போல நகர்ப்புறங்களில் அதிலும் குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு விகிதம் குறைவாகவே இருக்கிறது. 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அப்போது வாக்குச்சாவடிக்குள் இருப்போருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் 6 வாக்களிக்க முடியும்.
சீல்: வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இப்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அது குறித்து நாம் பார்க்காலம். வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும். பிறகு அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே அவை பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த இடத்திற்கு முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும்.
அடுத்து என்ன: அங்கு போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மொத்தம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அதை மீறி யாரும் உள்ளே செல்ல முடியாது. ஆயுதம் தாங்கிய நபர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
யாராலும் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. முகவர்களுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் மட்டும் தினந்தோறும் போய் பார்க்க முடியும். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் நிச்சயம் ட்ரோன்களை அங்கே பறக்க விடக்கூடாது என்ற விதி இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வரை இதே பாதுகாப்பு நடைமுறை அமலில் இருக்கும். ஜூன் 4ஆம் தேதி முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கும்.












Click it and Unblock the Notifications