Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அச்சு அசல் அனிருத்.. இளையராஜா உருவில் ஆனந்த் ராஜா.. ரஹ்மான் குரலில் ரூஃபியான்.. யார் இவர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா, ரஹ்மான், அனிருத் ஆகிய மூவரைப் போலவே அச்சு அசலாகப் பாடக்கூடிய மூன்று பேர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியதன் மூலம் பிரபலமாக மாறியுள்ளனர்.

அபிஷேக் ராகவன் என்ற இளைஞர் அப்படியே அனிருத் குரலில் அப்படியே பாடினார். இவரைப் போலவே ஆனந்த் ராஜா என்பவர் பார்க்க அப்படியே நடை,உடை என இளையராஜா போல இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் போலவே இருந்தார் அல் ருஃபியான்.

ar rahman anirudh

தன்னைப் பற்றி பேசத் தொடங்கிய அபிஷேக், "சின்ன வயதில் என் குரல் இவ்வளவு கட்டையாக இருக்காது. வளர்ந்த பிறகும்கூட 3வயது பையன் போலத்தான் என் குரல் இருந்தது. வீட்டில்கூட சிலர் கிண்டல் செய்வார்கள். ஒரு பருவத்திற்குப் பிறகு குரல் உடைய ஆரம்பித்தது. அதன்பிறகுதான் அனிருத் மாதிரி மாறியது. அதுகூட எனக்கு முதலில் தோன்றவில்லை. நானும் பாடகர். இசையமைப்பாளராக வரவேண்டும் என்பதுதான் என் கனவு. என் குழுவில் 10 பேர் உள்ளனர். குரல் உடைந்த பிறகு பாடத் தொடங்கிய பிறகு அனிருத் போல் குரல் உள்ளவை சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

நான் அவரைப் போல குரலை மாற்றி பாடவில்லை. எனக்கு இயற்கையாகவே ஒரு கட்டைக்குரல். அனிக்கு அதேபோல் கட்டைக்குரல். பாடும் போது அது பொருந்திப் போகிறது" என்கிறார். இவர் பாடும்போதும் மட்டுமல்ல; பேசும்போதும் அனிருத் மாதிரியே நம் காதுகளில் ஒலிக்கிறது.

"நான் விஸ்காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டுள்ளேன். கல்லூரியில் இசைக்குழு ஒன்றும் வைத்துள்ளேன். ஏஆர் ரஹ்மான் இசைப் பள்ளியில் பியானோ கற்றுவருகிறேன். அதனால் கல்லூரிக்கு அதிகம் போகமாட்டேன். ஷாட் ஃபிலிம், பேக்ரவுண்ட் மியூசிக் போடுவது என அதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன். எனது சகோதரிகள் கர்நாடக சங்கீதம் பாடுவார்கள்.

ar rahman anirudh

பலரும் பார்க்க அனிருத் போல் தோற்றத்தில் இருக்கிறேன். அவரைப் போலவே பாடுகிறேன் என என் மீது அன்பு செலுத்த ஆரம்பித்தனர். எனக்கு ஆரம்பக் கட்டத்தில் அது தேவையாக இருந்தது. வெளி உலகத்திற்கு நம் முகம் தெரியவேண்டும். அப்படி ஒரு கனவு இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. எனவே அது எனக்குச் சந்தோஷமாகவே இருந்தது. ஆனால், அவரைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக என் நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் நான் செய்தது இல்லை. பலர் என்னைப் பார்த்தால் அனிருத் மாதிரிதான் தெரிகிறேன் என்கிறேன். நான் கண்ணாடியில் பார்த்தால், அபிஷேக்போல்தான் தெரிகிறேன். ஒருநாளும் நான் அப்படி என்னை உணர்ந்ததே கிடையாது.

என் குழுவுடன் எந்தக் கல்லூரி கலைநிகழ்ச்சிக்குச் சென்றாலும் 'கத்தி' படத்தில் வரும் 'ஆத்தி' பாடலை கட்டாயம் பாடுவோம். அதைப் பாடினால் பரிசு எங்களுக்குத்தான். அதைப் பாடி பரிசு கிடைக்காத மேடையே கிடையாது. அந்தளவுக்கு அதைப் பாடிப் பாடி மெருகேற்றி வைத்திருந்தோம். அதனால் அந்தப் பரிசுகள் கிடைத்தன" என்கிறார். டிவி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் அதிகம் பேருக்கு இவரை தெரிந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அதனால் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடிவருவதாகச் சொல்கிறார். மேலும் கோபிநாத் சொன்ன பிறகுதான் தனக்குள் ஒரு பாடகர் என்ற நம்பிக்கை பிறந்தது என்று சொல்லி இருக்கிறார்.

இவர் அனிருத் போல தன் தோற்றத்தை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், இளையராஜா போல பாடும் ஆனந்த் ராஜா அவரைப் போலவே தன்னை நினைத்து வாழ ஆரம்பித்துள்ளார். அல் ருஃபியான் முதன்முதலாக சிறுவயதில் தான் கேட்டு வளர்ந்ததே ரஹ்மான் பாடலைத்தான் என்றும், தனது குரல் உச்ச ஸ்தாயியில் போகும் அளவுக்கு இருப்பதால் ரஹ்மான் குரல் ஒத்துப் போகிறது என்றும் சாதாரணமாக ரஹ்மான் பாடலை ஒரு எளிதாக எடுத்துப் பாட முடியாது என்றும் சொல்கிறார்.

தமிழ் சினிமாவில் இளையராஜா, ரஹ்மான், அனிருத் என்பது மூன்று தலைமுறை. ஆனால், இயற்கை இன்று இந்த மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களையும் ஒரே தலைமுறையில் உருவாக்கிக் கொடுத்துள்ளது. அது மிகப்பெரிய அதிசயம்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+