சென்னை அருகே திருப்போரூரில் கார் விபத்தில் சிக்கி மருத்துவக் கல்லூரி மாணவி பலி! 3 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே திருப்போரூரில் நடந்த சொகுசு கார் விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்று மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார் மிஸ்பா பாத்திமா (21). இவர், உடன் படிக்கும் 10 மாணவர்களுடன் மாமல்லபுரத்திற்கு நேற்று சென்றார்.

chennai accident car

10 மாணவர்கள் இரு கார்களில் சென்றனர். நேற்று மாமல்லபுரத்தில் இரவு விருந்து ஒன்றில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது இரு கார்களும் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் மிஸ்பா பாத்திமா உயிரிழந்துவிட்டார்.

மேலும் கோவை அபினந்தன், நெல்லையை சேர்ந்த செண்பக விநாயகம், உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+