Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயக்குமாருக்கு சிக்கல் மேல் சிக்கல்... திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் மனு தள்ளுபடி

திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியானது.

அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.கவினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

10 பிரிவுகளின் கீழ் வழக்கு

10 பிரிவுகளின் கீழ் வழக்கு

அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 ஜெயக்குமார் கைது

ஜெயக்குமார் கைது

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அ.தி.மு.கவினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த வழக்கில் நீதிமன்ற காவலில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி

ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு

ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஜாமின் மனு நகல் போலீஸ் தரப்புக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறினார். புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். இதையடுத்து ஜாமின் மனுவின் நகலை போலீஸ் தரப்புக்கு வழங்க ஜெயக்குமார் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நரேஷ் தரப்பில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். இதையடுத்து ஜாமின் மனுவின் நகலை போலீஸ் தரப்புக்கு வழங்க ஜெயக்குமார் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நரேஷ் தரப்பில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

எந்த காயமும் இல்லை

எந்த காயமும் இல்லை

இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தார தரப்பு வக்கீல், ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமின் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று வாதிட்டார். அதே சமயம் ஜாமின் வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் தவிர்த்த பிற நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என குறிப்பிடப்படவில்லை என்றும் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபருக்கு எந்த காயமும் இல்லை என்றும் ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசியல் உள்நோக்கம்

அரசியல் உள்நோக்கம்

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, சம்பவம் நடைபெற்ற வார்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என்றும் தாக்கபட்ட நபருக்கு எந்தவித காயங்களும் இல்லை. இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் பதியபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தார்.

 பாதிப்பு

பாதிப்பு

புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சட்டம் படித்த முன்னாள் அமைச்சரான அவர் இது போன்ற செயல்களை செய்வது துரஷ்திடவசமானது என்றும், சாதாரண நபரை அரை நிர்வாணபடுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவருக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். வாக்கு சாவடிக்குள் நுழைய அரசியல் கட்சியை சேரந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையம் எந்த அதிகாரமும் வழங்காத போது, வாக்குசாவடிக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டியுள்ளதாக தெரிவித்தார். ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என வாதிட்டார்.

சாட்சி விசாரணை

சாட்சி விசாரணை

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஜாமீன் மனுக்களை மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும், ஜாமீன் மனு மற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் எனவும், சாட்சி விசாரணை மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

காவலில் எடுத்து விசாரிக்க மனு

காவலில் எடுத்து விசாரிக்க மனு

மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன், சில நாட்கள்தான் சிறையில் உள்ளார், 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது, முன்னாள் அமைச்சர் என்ற அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார், பலர் தலைமறைவாகி உள்ளனர் என தெரிவித்தார். ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி தாக்கல் செய்த வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

 ஜாமின் மைனுவை

ஜாமின் மைனுவை

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், காவல் துறையின் ஆட்சேபத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கைதாகி சில நாட்களே ஆவதாலும், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும், பாதிக்கப்பட்டவர் இன்னும் மருத்துவமனையில் உள்ளார் போன்ற காவல்துறை வாதங்களை ஏற்று தள்ளுபடி செய்வதாக நீதிபதி அல்லி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+