அறநிலையத்துறை, வக்பு வாரியம் போல, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தனி அமைப்பு.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை, வக்பு வாரியம் போல, கிறிஸ்தவ தேவாலயங்கள், அதன் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்க சட்டப்பூர்வமான ஒரு அமைப்பை ஏன் உருவாக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கோவில்களை நிர்வகிக்க அறநிலையத்துறை உள்ளது. அதபோல் முஸ்லிம் மசூதிகள் மற்றும் இடங்களை நிர்வகிக்க வக்பு வாரியங்கள் செயல்படுகின்றன. அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், அதன் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்க சட்டப்பூர்வமான ஒரு அமைப்பு இந்தியாவில் கிடையாது. இந்நிலையில் கிறிஸ்தவ தேவலாயங்களை நிர்வகிக்கும் அமைப்பு ஒன்றின் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

என்ன வழக்கு
சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்டம் தேர்தல் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஆர்.சக்திவேல் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எஸ்.தங்கசிவன், எதிர் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வக்கீல் ஏ.எம்.பாக்கியநாதன் ஈஸ்டர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சி.எஸ்.ஐ. தூத்துக்குடி - நாசரேத் மறைமாவட்டம் தேர்தல் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்தார்கள்.
ஏராளமான வழக்குகள்
அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறுகையில், "சி.எஸ்.ஐ. தூத்துக்குடி - நாசரேத் மறைமாவட்டம் தேர்தல் தொடர்பான வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த உயர்நீதிமன்றத்திலும் சரி, கீழமை நீதிமன்றங்களிலும் சரி, கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
தேவாலயங்களுக்கு சொத்துக்கள்
தேவாலயங்கள் இதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்குகளுக்கு செலவு எல்லாம் தேவாலயம் நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. தேவாலயங்களுக்கு ஏராளமான சொத்துக்கள் மட்டுமல்ல, கல்வி நிலையங்களும், மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன.
அதிகாரத்தை கைப்பற்ற போட்டி
இதனால், தேவாலயங்களை நிர்வாக தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி பயங்கரமாக நடந்து வருகிறது. எனவே, இந்த தேவாலயங்களின் சொத்துக்கள், நிதிகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அமைப்புகளை பாதுகாப்பது அவசியம் ஆகும். இந்து கோவில்கள், முஸ்லிம் மசூதிகள் நிர்வாகங்களை ஒழுங்குபடுத்த அறநிலையத்துறை, வக்வு வாரியம் போன்றவை உள்ளன. அதுபோன்ற அமைப்பு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications