சரசரன்னு ஏறிய மல்லிப்பூ.. பின்னாலயே பிச்சிப்பூ.. மதுரை மாட்டுத்தாவணியில் என்னவாம்? இன்னைக்கு ஸ்பெஷல்
சென்னை: காய்கறிகளின் விலையில் திடீரென நிறைய மாற்றங்கள் தென்பட துவங்கி உள்ளன.. என்ன காரணம்? கோயம்பேட்டில் என்ன நடக்கிறது தெரியுமா?
தமிழ்நாட்டை பொறுத்தவரை காய்கறிகள் உற்பத்தி பெருவாரியாகவே நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு இருப்பதில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். போதாக்குறைக்கு பருவமழையும் சொதப்பிவிடுகிறது. அதனால்தான், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன...

பெரிய வெங்காயம்: குறிப்பாக, பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் அதிகளவு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
டிசம்பர், ஜனவரியில் பெய்த மழை, குளிரால், தக்காளி, சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்றவை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், இந்த வகை காய்கறிகள் சந்தைகளுக்கு குறைவாக வர துவங்கியதால், விலையும் அதிகமாகவே விற்கப்பட்டது.
காய்கறிகள்: கடந்த மாதத்திலிருந்துதான், காய்கறிகளின் வரத்து அதிகமாகி விலையும் தமிழகத்தில் மெல்ல குறைய துவங்கியது. கோடை காலம் துவங்கியிருப்பதால், காய்கறிகளின் விலையில் இனியும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது
கடந்த வாரம் கிலோ ரூ.98-க்கு விற்ற பீன்ஸ் நேற்று ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் பீன்ஸ் கிலோ ரூ.115 வரை விற்பனையானது... உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ரூ.50-க்கு விற்ற அவரைக்காய், நேற்றைக்கு ரூ.80க்கும், கடந்த வாரம் ரூ.28-க்கு விற்ற தக்காளி நேற்றைய தினம் ரூ.35-க்கும் விற்பனையானது.
சின்ன வெங்காயம்: இதேபோல் சின்னவெங்காயம் கிலோ ரூ.38-க்கும், பெரிய வெங்காயம் ரூ.34-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், கேரட் ரூ.78-க்கும், கத்தரிக்காய் ரூ.28-க்கும், பாகற்காய் ரூ.42-க்கும், முள்ளங்கி ரூ.28-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் சொல்லும்போது, வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சில காய்கறிகளின் வரத்து மட்டும் குறைந்துள்ளது. இதனால் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை ரூ.100-யை தாண்டி விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
காய்கறிகள் விலைகள்தான் இப்படி உயர்ந்துள்ளது என்றால், தமிழகத்தில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது..
பூக்கள் விலை: பங்குனி மாதம் பிறந்ததில் இருந்து பல விசேஷ நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, பூக்களின் விலையும் அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 9ம்தேதி தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விலை அதிகரித்தே விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மல்லிகை கிலோ ரூ.600க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ கிலோ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
அதுமட்டுமல்ல, ஏப்ரல் 12ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற உள்ளதால், எப்படியும் அடுத்தவாரம் பூக்களின் விலை இன்னும் அதிகமாகவே உயரக்கூடும் என்கிறார்கள் பூ வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications