ஸ்டாலினை சந்தித்த மகாராஷ்டிரா ‘புள்ளி’! நெகிழ்ச்சி “பரிசு”.. டக்கென திரும்பிய பாஜக! 2024க்கு பிளானா?
மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே இன்று சந்தித்தார்.
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுக்கு எதிரான பலமான கூட்டணியை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சிவசேனா
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் இணையத் திட்டமிட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த சிவசேனா, திடீரென காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணி உருவானதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

ஆதித்ய தாக்கரே
தற்போது பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், பாஜக மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் உள்ளது உத்தவ் தாக்கரே தரப்பு. இதனால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார் உத்தவ் தாக்கரே. இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே இன்று சென்னைக்கு வருகை தந்தார்.

உதயநிதியும்
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் ஆதித்ய தாக்கரே. இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவசேனா எம்.பி அனில் தேசாய், திமுக முன்னாள் எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை பாராட்டியுள்ளார் ஆதித்ய தாக்கரே.

கொடுத்த பரிசு
இந்தச் சந்திப்பின்போது கருணாநிதியும், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் ஆதித்ய தாக்கரே. அதேபோல, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய 'Karunanidhi : A life' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதித்ய தாக்கரேவுக்கு பரிசாக அளித்தார்.

அரசியல் பரபரப்பு
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார் ஆதித்ய தாக்கரே. திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலினுடன் சிவ சேனாவின் ஆதித்ய தாக்கரே நடத்திய திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஸ்டாலின் முயற்சி
இந்த சந்திப்பு 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியின் ஒரு கட்டமா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படியான சந்திப்பு நடந்துள்ளது பாஜக டெல்லி தலைமையையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications