குஷியில் துள்ள போகும் மதுரை, திண்டுக்கல், தேனி மக்கள்.. மோடி போட்ட மாஸ்டர் பிளான்.. இனி பறக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. அதோடு திண்டுக்கல்-தேனி-குமிளி நெடுஞ்சாலை NH-183ல் 138 கிமீ நீளமுள்ள நான்கு/ஆறு வழிப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்காக NHAI டெண்டர் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாநில அரசு சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.

Major six and four lane road are coming in Madurai, dindigul, Theni roads

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இப்போது இதற்கான டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

NHAI ஆனது 700 கோடி செலவில் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான 64 கிமீ கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலையை மேம்படுத்த உள்ளது. இங்கு விரிவுபடுத்தும் பணிகளை செய்து, புதிய நான்கு வழிச்சாலை அமைக்க உள்ளது இதற்கான.விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில்தான் மதுரை - போடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் தற்போது அங்கே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

இதனால் இந்த பாதையில் பயணம் இன்னும் எளிதாகும். அதோடு மிக வேகமாக மதுரையில் இருந்து போடிக்கு சென்று சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மாற்றம்: இன்னொரு பக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை ஆகிய சாலைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் இந்த மாற்றம் செய்யப்படும். இப்படி மொத்தம் 18 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சாந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது.

இதனால் கீழே பல்லாவரம் - குரோம்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எதிர் திசையில் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே இருக்கும் பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்று வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+