இரண்டில் ஒன்று! கமல்ஹாசனுக்காக டிக் அடிக்கப்பட்ட தொகுதி.. தேசிய அரசியலில் குதிக்கும் "உலக நாயகன்"?
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவையில் அல்லது தென் சென்னையில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் யாத்திரை மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
பக்கம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று இந்த பேரணியில் கலந்து கொண்டார். 108வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைந்து உள்ளது.

கமல்ஹாசன் முடிவு
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது. இதற்காக பெரிய அணியை கமல்ஹாசன் தேர்வு செய்து இருந்தார்., கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தனக்கு என்று கமல்ஹாசன் சார்பாக 300 பேர் கொண்ட குழு இந்த யாத்திரையில் நேற்று கலந்து கொண்டனர். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி.

அரசியல் கொள்கை
எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 16ம் தேதி கமல்ஹாசன் இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் கூட்டணி பற்றி பேசப்பட்டு இருக்கிறது.

கூட்டணி
யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களை கேட்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். எம்பி தேர்தலில் போட்டியிடலாம் என்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதாவது எம்பி தேர்தலில் கூட்டணி சார்பாக நின்று டெல்லிக்கு செல்லலாமா என்றும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாங்கள் என்ன கூட்டணி வைக்க போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரிய வரும். நான் என்ன திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கமல்ஹாசன்
முக்கியமாக கமல்ஹாசன் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகர்தான் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நேரத்தில் கட்சியை உருவாக்குவதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதே நிர்வாகி திமுகவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் கமல்ஹாசன் இந்த யாத்திரையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகும் விதமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவை
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக + காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் கமலுக்கு மாநில அரசியலில் பெரிதாக ரோல் இருக்காது. அது திமுக + கமல் இடையே ஒரு வித conflict of intrest ஐ ஏற்படுத்தும் என்பதால் கமல்ஹாசன் பெரும்பாலும் தேசிய அரசியல் மீது கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை.

தென் சென்னை
இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால், செந்தில் பாலாஜியின் அசுர உழைப்பையும் சேர்த்து கமல்ஹாசன் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் கோவை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கோவையை விட்டுக்கொடுக்க திமுக விரும்பாது. கோவையில் இதற்காகவே திமுக கடுமையான தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில்.. பெரும்பாலும் தென் சென்னையில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications