மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கமல்ஹாசன் அறிவிப்பு.. போலீசார் மீது குற்றச்சாட்டு!
சென்னை: பிப்.21-ல் மண்ணிவாக்கத்தில் நடக்க இருந்த மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு மார்ச் 7-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 21- ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
மாநாடுதான் ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர நமது கூடுகைகள் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்த்துள்ளார்.

காவல்துறை அனுமதி
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பொருண்மையிலான நமது கட்சியின் மாநில மாநாட்டினை பிப்ரவரி 21- ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அதற்கான அனுமதி கேட்டு கடந்த 6- ஆம் தேதியே காவல்துறையை அணுகினோம்.

ஒத்திவைக்கப்படுகிறது
இந்த அறிவிப்பினை எழுதும் நிமிடம் வரை வரை அனுமதி கிடைக்கவில்லை. கோவிட் பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடும் நிகழ்வினை மிகுந்த கவனமுடன் ஒருங்கிணைக்கப் போதிய கால அவகாசம் வேண்டும். காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாட்டு நிகழ்வை மார்ச் 7- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்.

கட்சி துவக்க விழா நடைபெறும்
மாநாடுதான் ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர நமது கூடுகைகள் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி, பிப்ரவரி 21- ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கத்தில் விமரிசையாக நடைபெறும்.

தமிழகத்தை சீரமைப்போம்
மார்ச் 7- ஆம் தேதி 'சீரமைப்போம் தமிழகத்தை' மக்கள் நீதி மய்யத்தின் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஒரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும். மார்ச் 8- ஆம் தேதி மகளிர் தினம் அன்று 'பெண் சக்தி' எனும் தலைப்பில் கட்டமைப்பு மற்றும் சார்பணிகளில் உள்ள அனைத்து மகளீரும் ஒன்று கூடி பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கில் நடைபெறும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications