நகை அடகு வைக்க பிளானா? 2ம் கட்ட டவுன்கள், சிறிய சிட்டிகளில் உள்ளவர்களுக்கு குஷி.. அசத்தலான செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகை கடன் வழங்குவதில் பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் கடினமானதாக இருந்தாலும் கடன் தரும் நிறுவனங்களுக்கு பல்வேறு பாதுகாப்புகளை இந்த விதிகள் வழங்குகின்றன. இந்த நிலையில்தான் தங்க நகை கடன் வழங்கும் துறையில் பல பெரிய நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக இரண்டாம் கட்ட டவுன்கள், சிறிய சிட்டிகளில் இந்த நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கி உள்ளன.

இந்த துறையில் புதிதாக கால்பதித்த நிறுவனம் குறித்து பார்க்கும் முன் ஆர்பிஐயின் புதிய விதிகள் பற்றி பார்த்து விடலாம்.

gold rate silver investment

1. வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

3. தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

4. கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும்.

5. தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோ விற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.

கால் பதிக்கும் புதிய நிறுவனங்கள்

புதிய விதிகள் கடினமானதாக இருந்தாலும் கடன் தரும் நிறுவனங்களுக்கு பல்வேறு பாதுகாப்புகளை இந்த விதிகள் வழங்குகின்றன. இந்த நிலையில்தான் தங்க நகை கடன் வழங்கும் துறையில் பல பெரிய நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக இரண்டாம் கட்ட டவுன்கள், சிறிய சிட்டிகளில் இந்த நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கி உள்ளன.

உதாரணமாக பிரபல பூனாவல்லா ஃபின்கார்ப் (பிஎஃப்எல்) நிறுவனம் தங்கக் கடன் பிரிவில் நுழைந்து உள்ளது. இந்த நிறுவனம் தங்க அடகு கடன்களை பல விதமான பிளான்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் பிஸ்னஸை விரிவு செய்ய கடன் வாங்குபவர்கள், விவசாயச் செலவுகள் அல்லது தனிப்பட்ட தேவைகள் போன்ற செலவுகளைச் சமாளிக்க நகை அடகு வைப்பவர்களை குறி வைத்து தொடங்கப்பட்டு உள்ளது.

பூனவல்லா ஃபின்கார்ப் குறிப்பாக இரண்டாம் கட்ட டவுன்கள், சிறிய சிட்டிகளில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த நான்கு காலாண்டுகளில் 400 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கமானது டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் கவனம் செலுத்தும். புதிய ஆர்பிஐ விதிகள் காரணமாக பெரிய நிறுவனங்கள் நகை கடன் துறையில் இறங்கி உள்ளன. அதில் தற்போது பூனாவல்லா ஃபின்கார்ப் (பிஎஃப்எல்) கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+