பிளஸ்-2 தேர்வு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவில் பல மாணவர்கள் ஹேப்பி..கலக்கத்தில் ஆசிரியர்கள்
சென்னை: பிளஸ்-2 தேர்வு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் 2,328 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறி உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இந்த தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த தேர்வு முடிவில் விருப்பம் இல்லாதவர்கள், சந்தேகம் இருப்பவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, விடைத்தாள் நகல் பெற 49 ஆயிரத்து 245 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் பெறாமல் மறுகூட்டலுக்கு நேரடியாக 1,540 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

பிளஸ்-2 தேர்வு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று கூறியிருந்தார்.
மேலும் தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பின் படி, தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியிருந்தார். மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பின் படியே மறுகூட்டல் முடிவுகள் வெளியாகி இருந்தது. இதில் விடைத்தாள் நகல் பெறாமல் மறுகூட்டலுக்கு நேரடியாக 1,540 பேர் விண்ணப்பித்து அதில் 19 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேநேரம் விடைத்தாள் நகல் பெற்று பின்னர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 175 பேரில் 131 பேருக்கு மதிப்பெண் மாற்றம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த 3,632 மாணவ-மாணவிகளில், 2,178 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவில் 2,328 மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் விடைத்தாள் திருத்தும் பணியில் தவறு செய்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் கல்வித் துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications