கூட்டணியை பற்றி பேச பொன்.ராதா யார்...? அவருக்கு என்ன பவர் உள்ளது...? கே.பாலகிருஷ்ணன் கேள்வி..!
சென்னை: கூட்டணியை பற்றி பேச பொன்.ராதாகிருஷ்ணன் யார் என்றும் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வினவியுள்ளார்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்போது சிலர் கிளம்பியுள்ளதாகவும் விமர்சித்தார். திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறக்கூடும் என பொன்.ராதாகிருஷ்ணன் எதன் அடிப்படையில் கூறினார் என தனக்கு புரியவில்லை என்றும் அவர் என்ன பாஜக மாநிலத் தலைவரா எனவும் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பது தான் களநிலவரம் என்றும் அது புரியாமல் பாஜக பேசிக்கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் சேரத் தயாராக இல்லை எனக் கூறினார்.
கடந்த ஆறரை ஆண்டு கால மோடி ஆட்சியால் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கடுங்கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார். ஆகையால் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதையெல்லாம் தாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய வேண்டும் என நினைப்பவர்களின் கனவு பலிக்காது என்றும் பாஜக, அதிமுகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதால் தங்கள் கூட்டணிக்கு வெற்றி உறுதி என கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications