இனிமேல் "இதுக்கும்" லைசென்ஸ் கட்டாயம்.. சென்னை மாநகராட்சியின் அடுத்த சபாஷ்.. ஜுன் மாதம் அமலாகிறது
சென்னை: சென்னையில் அடுத்த அதிரடியை மாநகராட்சி முன்னெடுக்க போகிறதாம்.. இதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபகாலமாகவே சென்னையில் சுற்றித்திரியும் நாய்களால், சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. அதனால்தான், நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை, சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது. அத்துடன் சில கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் அமல்படுத்தி உள்ளது.

மாடுகள்: அதுபோலவே, மாடுகள் விஷயத்திலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. சாலையோரங்களில் புற்கள் முளைத்திருப்பதால், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய விடுகிறார்கள்.. இதனால், இரவு நேரங்களில், சாலையின் நடுவில் படுத்து கிடக்கும் மாடுகளைக்கண்டு, கனரக வாகனங்கள் திடீரென பிரேக் அடிப்பது. பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் நடக்கின்றன.
அதேபோல, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் பரபரப்புடன் செல்லும்போது, கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. இதன்காரணமாக போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்படுவதுடன், பைக்கில் வேகமாக செல்பவர்கள், திடீரென எதிரில் இருக்கும் மாடுகளின் மீது மோதிவிடுவதால், நிலைதடுமாறி விழுந்து கை, கால்களை உடைத்து காயமடைகிறார்கள்.
உயிரிழப்புகள்: சிலசமயம், உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது. சில இடங்களில், நடுரோட்டிலேயே மாடுகள் படுத்து கிடக்கின்றன.. சிலசமயம், சாலைகளில் செல்லும் மாடுகள் திடீரென சண்டையிட்டு கொள்வாலும் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்..
அதனால்தான், கால்நடைகளை வளர்ப்பவர்களை மாடுகளை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது.. அந்தவகையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லைசென்ஸ்: நாய்களை போலவே, சென்னையில் சாலைகளில் மாடுகளும் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
போதிய இடமும், தொழுவமும் இல்லாமல் வளர்ப்பதால்தான், இப்படி தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித்திரிய நேரிடுகிறதாம். அதனால்தான், மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டி வலியுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். மாநகராட்சியின் இந்த அதிரடிகள் சென்னைவாசிகளின் கவனத்தை பெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications