நேற்று பெய்ததே.. அதேபோல் இன்று மாலையும் வெளுக்க போகிறது.. சென்னைக்கு காத்திருக்கும் கனமழை!

சென்னையில் நேற்று பெய்த கனமழை போலவே இன்று மாலையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று பெய்த கனமழை போலவே இன்று மாலையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுவ மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பாம்பனில் 120 மிமீ மழை நேற்று பெய்தது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவில் பாம்பனில் நேற்று மழை பெய்தது.

நீலகிரி எப்படி

நீலகிரி எப்படி

அதேபோல் கடந்த மூன்று நாட்களாக நீலகிரியில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரியே தற்போது வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதேபோல் நீலகிரியில் சில இடங்களில் அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று 36 செமீ மழை பெய்தது. தற்போதும் அங்கு மழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

நேற்று இதேபோல் இரவு 10 மணிக்கு மேல் சென்னையிலும் மழை பெய்தது. தொடர்ந்து விடாமல் 2 மணி நேரம் மழை பெய்தது. சென்னையில் தற்போது கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

இன்று மீண்டும்

இன்று மீண்டும்

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும். மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல், இரவு முழுக்க மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தென் சென்னையில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Recommended Video

    கர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு
    கடல்

    கடல்

    சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் வானிலை மையம் கூறியுள்ளது. மெரினா, பெசன்ட் நகர் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம், என்று வானிலை மையம் கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+