சும்மா சும்மா.. பூ விக்குற பெண்கள் கஸ்டமர் குழந்தைகளை கிள்ளி கொஞ்சுறது தப்பு! "மாயாஸ் அம்மா" கருத்து
சென்னை: பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மாயாஸ் அம்மா (Maya's Amma) பூவிற்கும் பெண்கள் கஸ்டமரின் குழந்தைகளை கிள்ளி கொஞ்சுவது தப்பு என தெரிவித்துள்ளார்.
மாயாஸ் அம்மா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வரும் பெண் ஸ்வாதி ஜெகதீஷ். இவர் பெண்களுக்கு வன்கொடுமைகளுக்கு எதிராக பேசி வருகிறார். வன்கொடுமைகளுக்கும் பிற விஷயங்களுக்கும் முக்கிய காரணமாக இருப்பதே மக்களுக்கு அவர்களுடைய உடல் அமைப்பு, எதிர் பாலினத்தவரின் உடல் அமைப்பு பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் இல்லாததுதான்.

இந்த சமயங்களில் பெண்களைத்தான் எல்லோரும் குற்றம் சொல்கிறார்களே தவிர ஆண்களை யாரும் சொல்வதில்லை என்பதுதான் இவருடைய கருத்தாக இருக்கிறது. பெண்களின் உடல் அமைப்பு குறித்து சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஸ்வாதி ஜெகதீஷ். இவர் மாயாஸ் அம்மா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்துள்ளார்.
அவருடைய மகள் மாயாவின் பெயரில் இந்த பக்கத்தை நடத்தி வருகிறார். இவர் பதிவிடும் பல செய்திகளும் வீடியோக்களும் பலருக்கு வரபிரசாதமாக இருந்து வருகிறது. இந்த சமூகத்தில் எதை பேசினால் தவறு என நினைக்கிறோமே அதுகுறித்த விழிப்புணர்வைதான் அவர் ஏற்படுத்தி வருகிறார்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு கவுன்சலிங், செக்ஸ் கல்வி, உடல் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து அவர் பேசி வருகிறார். எதையும் பேசாமல் மூடி மூடி வைப்பதால்தான் எது தவறு எது சரி என குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்புணர்வு இல்லாமல் போய்விடுகிறது.
Mom influencer being offended for a random பூ விக்குற பாட்டி pinched her daughter's cheek pic.twitter.com/f7Y6yEjAqV
— Ra Ku (@ra_ku2020) July 25, 2023
மேலும் இவர் ஆன்லைன் வகுப்புகளையும் எடுத்து வருகிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் அவர் யூடியூப் சேனல் வைத்துள்ளார். ஆங்கிலத்திலும் பேசுவார். இதனால் மலையாள மக்கள் புரிந்து கொள்கிறார்கள். பாலியல் கல்வி குறித்தும் குழந்தைகளுக்கு பேசுவார். இவர் ஒரு வீடியோவில் தனது மகளுக்கு நேர்ந்த விஷயம் குறித்து தெரிவித்துள்ளார்.
இவர் பூ வாங்குவதற்காக சென்றுள்ளார். காரில் சென்ற போது ஒரு கூடையில் ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டிருந்தார். அவர்களை நிறுத்திய ஸ்வாதி, மல்லிகை பூ என்ன விலை என கேட்டு வாங்கியுள்ளார். அதற்கு காசு கொடுக்க பர்ஸை சுவாதி திறந்து பணம் கொடுத்துள்ளார். பிறகு பின்னால் கார்கள் வரிசை கட்டி நின்றதால் இவரும் வேகமாக அந்த இடத்தை விட்டு வந்துள்ளார்.
அப்போது காரில் இருந்த மகள் தன்னை அந்த பாட்டி கன்னத்தை பிடித்து கிள்ளினார் என்கிறார். ஒவ்வொரு உடலுக்கும் எல்லை உண்டு. அதை மீறும் உரிமை யாருக்கும் கிடையாது. நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் தொடக் கூடாது என கூறுகிறார். அப்போது அந்த சிறுமி இதை ஏன் அவர்கள் பெரியவர்களிடம் செய்ய மாட்டேங்கிறார்கள் என கேட்கிறார். அதற்கு ஸ்வாதி எனக்கு தெரியாது என்கிறார்.
உடனே அந்த சிறுமி தான் குட்டியாக கியூட்டாக இருப்பதால் அந்த பாட்டி கன்னத்தை பிடித்து கிள்ளியிருக்கலாம் என்கிறார். ஆனால் ஸ்வாதியோ ஒரு வேளை குழந்தைகள் வாயை திறந்து என்னை கிள்ளாதீர்கள், எனக்கு பிடிக்காது என சொல்லமாட்டார்கள் என்பதாலோ என்னவோ! பொதுவாக நாம் ஆண்களை மனதில் வைத்தே நம் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லித் தருவோம். இந்த விவகாரத்தில் மூதாட்டி என்றாலும் குழந்தைகளை கொஞ்சக் கூடாது என மாயாஸ் அம்மா சொல்கிறார்.
முதியவர்களாக இருந்தாலும் குழந்தைகளை கொஞ்சுவது சரியா தவறா-உங்கள் கருத்துகள் என்ன என்பதை சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications