ஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஈரோட்டில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்- வைகோ- வீடியோ

    சென்னை: ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, தேர்தல் அலுவலர் ஒதுக்கப்போகும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் திமுக தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மதிமுகவுக்கு ஈரோடு லோக்சபா தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு ராஜ்யசபா தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    MDMK will contest in its own symbol in Erode

    இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று இன்று வைகோ அறிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில், கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தனிச் சின்னத்தில் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சிதம்பரம் (தனி) தொகுதியில், திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் தொல்.திருமாவளவன், தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக சின்னங்களை பெற்று அவற்றை குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது பெரும் சவாலான விஷயமாகும்.

    எனவேதான், சிறிய கட்சிகளை சேர்ந்த, திமுக கூட்டணி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, திமுக தலைமை வற்புறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+