கொடைக்கானல் டூர் போன மருத்துவ மாணவர்! தீபாவளி அதுவுமா இப்படியா ஆகணும்? ஆட்கொள்ளி ஐந்து வீடு அருவி!
திண்டுக்கல்: தீபாவளிக்கு முன்னதாக கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஐந்து வீடு அருகில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி மாயமானார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அருவிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. ஐந்து அருவியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றுப்பகுதியில் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. இதுவரை அந்த அருவியில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள "ஐந்து வீடு அருவி" சுற்றுலா பயணிகளால் பெருமளவில் வருகை தரும் இடமாகும். ஐந்து வீடு அருவிக்கு
கடந்த சனிக்கிழமை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
அந்த வகையில், பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் அருவிக்கு குளிக்கச் சென்ற நிலையில்
நிலையில் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வந்த
நந்தகுமார் ( வயது 21) என்ற மருத்துவக் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.

நீரில் மூழ்கிய மாணவனை தேடும்பணியில் கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதியில் இருந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என 50 -க்கும் மேற்பட்டவர்கள் மாணவனை தேடிவந்தனர். இந்த நிலையில் கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும்அருவிப்பகுதியில் தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இறந்த மருத்துவ மாணவர் உடலை தேடிய நிலையில் அருவி பகுதியில் பாறையில் நடுவே நந்தகுமாரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. மேலும் இறந்த மாணவனின் உடலை அருவி கீழ்ப்பகுதியில் இருந்து ஊர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் நடை பயணமாக தூக்கி வந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம் என்னவெனில், இதுவரை இந்த "ஐந்து வீடு அருவி"யில் மட்டும் 11 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகியுள்ளனர். இருப்பினும், அங்கு எச்சரிக்கை பலகைகள் இருந்த போதும், பலரும் அதை புறக்கணித்து நீராடச் செல்லுவது தொடர்ந்து வருத்தத்துக்குரியதாக உள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர் நந்தகுமாரின் மரணம் அவரது குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த சம்பவம் சுற்றுலா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வியையும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications