நாம் தமிழரில்.. அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள்.. சீமானா இப்படி? என்னங்க எதுவுமே புரியலையே!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து நடத்த சில சம்பவங்கள் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். ஒரு காலத்தில் சீமான் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரஜினி தமிழர் இல்லை என்று கூறி விமர்சனம் செய்து இருக்கிறார்.

சம்பவம் 1 : ரஜினியின் ஆன்மீக அரசியலை விமர்சனம் செய்துள்ளார். ரஜினியின் பல்வேறு செயல்பாடுகளை மிக கடுமையாக சாடி இருக்கிறார். ஆனால் அதே சீமான் ரஜினியை போய் சந்தித்துள்ளார். அதிலும் கைகட்டி பவ்வியமாக அவர் நின்ற விதம் விவாதம் ஆகி உள்ளது.
சீமானா இப்படி? அவர் ஏன் ரஜினியை சந்தித்தார்? இதற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முக்கியமாக அவ்வளவு விமர்சனம் செய்துவிட்டு சீமான் எப்படி ரஜினியை சந்திக்க முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சம்பவம் 2: இது போக நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.. அந்த கட்சியின் பலமே அடிமட்ட தொண்டர்கள்தான். ஆனால் அவர்களே கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் முகமாக.. மாவட்ட அளவில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் என்று கருதப்பட்ட பல உள்ளூர் தலைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அதிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. கட்சியில் சீமான் தங்களின் பேச்சுக்கு மரியாதையே கொடுக்கவில்லை என்பதை காரணமாக கூறி இருந்தனர்.
அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை.
சீமான் இவர்களிடம் பேசாமல் போனதே இதற்கு முக்கிய காரணம். போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதேபோல் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் தனக்கு மரியாதையே இல்லை என்று கூறி இவர் வெளியேறி உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் நெல்லை மாவட்ட நாதக இளைஞரணி தலைவர் பர்வீன் உட்பட நெல்லை நாதக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமானிடம் வாக்குவாதம் செய்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதோடு முக்கியமான நிர்வாகிகள் கட்சியில் இருந்தும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications