"காவி சாயம்".. ஒன்னுமே புரியல.. திடீர்னு "உள்ளே" வர்றாரே பிரபலம்.. நந்தனத்தில் ஏற்பாடு.. யாரு ரஜினி?
ரஜினி காந்த் ரசிகர்கள் திடீரென அவருக்காக ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்
சென்னை: விரைவில் எம்பி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், புது தகவல் ஒன்று கிளம்பி உள்ளது.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள், படுகுஷியில் உள்ளார்கள். என்ன காரணம்?
ரஜினியின் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே, அவரது அரசியல் வருகை குறித்த பேச்சும், அந்த சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
ரஜினியின் அரசியல் வருகை தொடர்பான பேச்சுக்களால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்றாலும், சூடுபிடித்த அதே வேகத்தோடு, அந்த பேச்சுக்கள் காணாமலும், மறைந்தும் போய்விடுவதும் இங்கே பழக்கமாகிவிட்டது.

தாமரை கனவு
சில வருடங்களுக்கு முன்புவரை, தங்கள் கட்சிக்குள் ரஜினியை கொண்டுவர பாஜக தரப்பு நிறையவே முயற்சிகளை எடுத்தது.. இதற்கு காரணம், ரஜினிக்கு இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் உண்டு என்பதாலும், மத உணர்வுகள் மேலோங்கியிருப்பதாலும், பாஜக போன்ற இந்துத்துவா அமைப்புகள் ரஜினியை தங்களது அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ள அதிகமாகவே முயன்றதாக கூறப்பட்டது.. அதற்கேற்றவாறு, "ஆன்மீக அரசியல்" என்ற வார்த்தையை ரஜினி உதிர்த்துவிடவும், ஏற்கனவே நிலவிவந்த சந்தேகங்கள், யூகங்கள் மேலும் வலுவாகின.

மாயாஜாலம்
ரஜினி சொன்ன ஆன்மீக அரசியல் தமிழகத்தில் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்ற குழப்பம் தமிழக மக்களிடத்தில் ஏற்படவே செய்தது. இடஒதுக்கீடு, மூடநம்பிக்கை, பகுத்தறிவு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள், மொழியின் மேன்மை, தொன்மை வாய்ந்த தமிழ்க்கலாச்சாரம், பண்பாட்டு பாரம்பரியம் போன்ற விஷயங்கள்தான் காலம்காலமாகவே, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானித்து வருகின்றன.. அந்த வகையில், இவைகளுக்கெல்லாம் ரஜினியின் "ஆன்மீக அரசியல்" ஈடுகொடுக்குமா? என்ற சந்தேகமும் கிளம்பியது.

காலி போஸ்டிங்
ஆனால், "காவி சாயம்" தனக்கு பூசப்பட்டுவிடுமோ என்ற கலக்கம் ரஜினியை கவ்வியிருந்த நிலையில், எதற்குமே பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், இறுதியில், அரசியலுக்கே வராமல், விலகிவிட்டார். ரஜினியின் இந்த முடிவு, பாஜக தரப்புக்கு சற்று அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அப்போது ஏற்படுத்தியதாம்.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த வருடம் திடீரென ஒரு தகவல் மீடியாவில் கசிந்தது.. அதாவது, இந்தியாவின் சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே இருப்பதால், இவைகளில் சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று பாஜக மேலிடம் யோசித்ததாம்.

10 தாமரைகள்
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும், மக்களிடம் இழந்த ஆதரவை, அறுவடை செய்துவிடலாம், இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பாஜக தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வட்டமடித்தன. ஆனால், இதற்கு பிறகு இந்த தகவல்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.. அப்படியே அமுங்கிப்போய்விட்டது.. இந்நிலையில், விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. எப்படியும் தமிழகத்தில் 10 தாமரைகளையாவது மலர வைத்துவிடுவது என்று பாஜகவும் முனைப்பு காட்ட துவங்கி உள்ளது.

காவிசாயம்
எனவே, ரஜினியை அவ்வளவு எளிதில் பாஜக விட்டுவிடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கட்சியாக ரீதியாக ரஜினி உடன்பட மறுப்பதால், பாஜக சாராத விழாக்களில் அவரை பங்கேற்க வைத்து, பாஜகவுக்கு ஆதரவாக பேச வைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால், "என் மேல் பாஜக சாயம் பூசப்பார்க்கிறார்கள். திருவள்ளுவர் மேல் காவி சாயம் பூசுவது போல் என்மேல் பூசவும் முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்" என்று தனக்கும், பாஜகவுக்குமான இடைவெளியை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்த நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகம், எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

படுஸ்பீடு
இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு புது தகவல் வெளியாகி உள்ளது.. "மனிதம் காத்து மகிழ்வோம்" - என்ற தலைப்பில், ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒரு மாநாட்டை நடத்துகிறார்களாம்.. இந்த மாநாடு, வருகிற 26-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. கிரவுண்டில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. "தலைவருக்காக ஒன்று கூடுவோம் - தலைவர் வழியில் தொண்டாற்றுவோம்" என்றும் சப்-டைட்டிலுடன் அழைப்பிதழ் படுவேகமாக தயாராகி கொண்டிருக்கிறதாம்..

அரசல்புரசல்
சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம், திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கலைப்புலி தாணு, எஸ்.பி.முத்துராமன், ராக்லைன் வெங்கடேஷ், ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட தமிழ்த் திரைப்பட பிரபலங்களும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ரஜினி ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர்.. அரசியலுக்கு வரமாட்டேன் என ஒதுங்கிவிட்ட ரஜினிக்காக மிகப்பெரிய அளவில் இப்படி ஒரு மாநாட்டை ரஜினி ரசிகர்கள் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? இதற்கு ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கிறதா? என்பதுதான் தற்போதைய ஹாட் கேள்வியாக களத்தில் சுற்றிவருகிறது.. என்னவா இருக்கும்???
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications