இது என்ன கேளிக்கை விடுதியா? யார் என்ன பேசுகிறார்கள் என கவனியுங்க..டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூடியதும் உறுப்பினர்கள் அமைதியாக இருங்க..கேள்வி என்ன..பதில் என்ன..என்று கொஞ்சம் கவனியுங்கள்...என்று சபாநயகர் அப்பாவு உறுப்பினர்களை கடிந்து கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு விடுமுறை நாள்களை தவிர்த்து நாள்தோறும் சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பது.. பல்வேறு மக்கள் பிரச்சினைகளை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எதிர்க்கட்சிகள் கொண்டு வருவது என தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏக்களின் சில கருத்துக்களுக்கு சபாநாயகர் அப்பாவு கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் கமெண்ட் அடிப்பதும் அவையை கலகலப்பாக்கி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் வழக்கம் போல திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கையை சபாநாயகர் அப்பாவு தொடங்கினர். கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ தமிழரசி எழுப்பிய கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பதிலளித்து பேசினார். அப்போது எம்.எல்.ஏக்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த சபாநாயகர் அப்பாவு சற்று கடிந்து கொண்டார்.
அப்பாவு கூறுகையில், "உறுப்பினர்கள் அமைதியாக இருங்க.. கேள்வி என்ன.. பதில் என்ன.. என்று கொஞ்சம் கவனியுங்கள்.. இது ஒன்னும் கேளிக்கை விடுதி கிடையாது. சட்டமன்றம். யார் என்ன பேசுகிறார்கள்..எ ன்ன? என்று கவனிக்கக் கூடிய இடம் இது" என்று சற்று டென்ஷன் ஆக கூறினார்.
வழக்கமாக உறுப்பினர்கள் ஏதேனும் கூறினால் அதற்கு கூலாக பதில் கமெண்ட் அடித்து அவையை சபாநாயகர் கலகலப்பாக்குவதுண்டு. ஆனால், இன்று அவைக்கு வந்த வேகத்தில் எம்.எல்.ஏக்கள் பேசிக்கொண்டு இருந்ததால், டென்ஷன் ஆனதுடன் கடிந்து பேசினார். இதனயடுத்து அவை கப்சிப் ஆனது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications