'ஆஸ்கார் நாயகனுக்கு தேவையான உதவிகளை செய்வோம்..' திடீர் மீட்டிங் பிறகு அன்பில் மகேஷ் பளீச் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்துப் பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான்.

அதன் பிறகு சுமார் 30 ஆண்டுகளாகவே இசைத்துறையில் கலக்கி வருபவர் ஏஆர் ரகுமான்.

ஏர்.ஆர். ரகுமான்

ஏர்.ஆர். ரகுமான்

தமிழ்ப் படங்களைத் தாண்டி இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழி படங்களிலும் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக, கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான slumdog millionaire என்ற திரைப்படத்திற்காக இரட்டை ஆஸ்கார் விருதுகளை வென்று கலக்கினார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார்.

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

இந்தச் சூழலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை ஏ.ஆர்.ரகுமான்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திடீரென சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், இந்தச் சந்திப்பில் இருவரும் எது தொடர்பாகப் பேசினார்கள் என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

அன்பில் மகேஷ் ட்வீட்

அன்பில் மகேஷ் ட்வீட்

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாகக் கூறி அவருக்கு உறுதியளித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சர்வதேச அளவில்

சர்வதேச அளவில்

அமைச்சர் அன்பில் மகேஷுன் இந்த பதிவுகளும் ஏர். ஆர். ரகுமான் உடன் இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சியை ரகுமான் எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளது இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இது ரகுமான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரகுமானின் முயற்சி என்னவாக இருக்கும் என்பது குறித்தும் பலரும் தங்கள் வியூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+