சென்னையில் ஒரு அடி நிலம் கூட எனக்கு இல்லை! அமலாக்கத்துறையிடம் கெத்து காட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக உளவுத்துறை முன்னாள் ஐஜி ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக எதுவும் செய்யவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு சொந்தமாக சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட கிடையாது என்றும் மடியில் கணம் இல்லாததால் தனக்கு வழியில் பயமில்லை எனவும் கூறி அமலாக்கத்துறையிடம் கெத்து காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறை விசாரணை மட்டுமல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக துணிச்சலுடன் கூறியிருக்கிறார்.

கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதில் வீடு கட்டி விற்பனை செய்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சேட் மீது வழக்குப்பதியப்பட்டு அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதனால் 2006-2011 திமுக ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி அழைத்து நேற்று விசாரணை நடத்தியது.

ஜாபர் சேட்

ஜாபர் சேட்

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். 1989 பேட்ச் அதிகாரியான இவர் தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி., சிபிசிஐடி டிஜிபி, என பல உயர் பதவிகளை வகித்தவர். கடைசியாக அவர் பணி ஓய்வு பெறும் போதும் தீயணைப்புத்துறை டிஜிபியாக பாணியாற்றினார்.

நில ஒதுக்கீடு

நில ஒதுக்கீடு

ஜாபர் சேட் தனது மனைவி பெயரில் சமூக சேவகர்களுக்கான கோட்டாவில் கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்றிருந்தார். பெசண்ட் நகர் கோட்டத்தின் திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் இந்த நில ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதனிடையே அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஜாபர் சேட் மீது 2011-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியிருந்தார் ஜாபர் சேட். இப்படியாக இந்த வழக்கு சென்று கொண்டிருந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இதை கையில் எடுத்தது. ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறையின் பிடிகள் இறுகத் தொடங்கின.

 கடந்த மாதம்

கடந்த மாதம்

இதையடுத்து கடந்த மாதம் 20-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஜாபர் சேட்டிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றன. இதேபோல் சர்ச்சைக்குரிய நில ஒதுக்கீடு செய்யப்பட்ட காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு அமலாக்கத்துறை சார்பில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. கண்புரை அறுவைச் சிகிச்சை, கட்சிப்பணி, ஆட்சிப்பணி காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமியால் கடந்த மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

9 மணி நேரம் விசாரணை

9 மணி நேரம் விசாரணை

இந்நிலையில் நேற்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 9 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக தாம் செயல்படவில்லை என்றும் பல முறை அமைச்சராக இருந்தும் சென்னையில் இன்னும் ஒரு சதுர அடி நிலம் கூட தனக்கு சொந்தமாக இல்லை எனவும் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளையே ஆச்சரியப்பட வைத்தார்.

அமைச்சர் காட்டிய கெத்து

அமைச்சர் காட்டிய கெத்து

மேலும் மடியில் கணம் இல்லாததால் தனக்கு வழியில் பயமில்லை எனவும் அமலாக்கத்துறை விசாரணை மட்டுமல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக கூறி அமைச்சர் ஐ.பெரியசாமி கெத்து காட்டியிருக்கிறார். சட்டசபை நடக்கும் நாட்கள் மற்றும் துறை ரீதியான பணிகள் தலைமைச் செயலகத்தில் இருக்கும் நாட்களை தவிர பெரும்பாலும் திண்டுக்கல்லில் இருப்பதையே அமைச்சர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+