கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணைகளில் ரூ.18,000! அமைச்சர் மா.சு. உறுதி! பணம் வராதவர்கள் என்ன செய்யணும்?
சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணைகளில் ரூ.18,000 வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். இதுவரை ஒரு சிலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் இனி பணம் கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.
இது பற்றி அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது;

''தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்த மகப்பேறு நிதியுதவி திட்டம் படிப்படியாக இன்று இந்தியா முழுமைக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவும் திட்டமாக மாறியுள்ளது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ரூ.6000/- வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012 ரூ.12,000/- மற்றும் தற்பொழுது ரூ.18,000/- ஆக உயர்த்தி முதல் இரு கர்ப்பத்திற்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. ''
''2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக ரூ.3000 வழங்கியது. இதோடு மாநில அரசின் பங்களிப்பு ரூ.15000த்தோடு சேர்த்து ரூ.18,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14,000 ரூபாய் ரொக்கமாகவும், ரூ.4000 மதிப்பிலான 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2018க்கு பிறகு 5 தவணைகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பம் தரித்த 3வது மாதம் ரூ.2000-மும், 4வது மாதம் ரூ.2000-மும், குழந்தை பிறந்தவுடன் ரூ.4000-மும், குழந்தை பிறந்து 3 மாதம் கழித்து ரூ.4000-மும், 9 மாதம் கழித்து ரூ.2000 என்று ரூ.14,000 த்தோடு ரூ.4000 மதிப்பிலான 2 பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.''
''தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்படுத்திய திட்டம் என்பதால், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.O என்ற இரண்டு திட்டங்களும் ஒருங்கிணையும்போது, பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பதில் மாறுபட்ட நிலை உருவானது. இதனால் 2 ஆண்டுகளாக முதல் தவணை தொகை பயனாளிகளுக்கு சென்று சேருவதில் சிறிய தாமதம் ஏற்பட்டது. முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய அரசிடம் தொடர்ந்து இது குறித்து பேசப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறையும், ஒன்றிய அரசின் சார்பில் சமூக நலத்துறையும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. ''
''இந்த இரு துறைகளின் வளைதளத்தில் உள்ள குறைகளை கலைவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இதற்கு தீர்வு ஏற்பட்டதையடுத்து, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, புதியதாக சீரமைக்கப்பட்டு, 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த தொகை இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படவுள்ளது. கர்பம் தரித்த 4வது மாதம் ரூ.4000-மும், குழந்தை பிறந்தவுடன் ரூ.4000-மும், குழந்தை பிறந்து 4 மாதங்கள் கழித்து ரூ.6000-மும் என்று ஆக மொத்தம் ரூ.14,000 ரொக்கமாகவும், முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் ஊட்டச்சத்து பெட்டகமும் இணைத்து தரப்படவுள்ளது. ''
''இதற்கு முன்பு குழந்தை பிறந்து 9 மாதங்கள் கழித்து கடைசி தவணை வழங்கப்பட்டு வந்தது, தற்போது குழந்தை பிறந்து 4வது மாதமே கடைசி தவணை வழங்கப்படவுள்ளது. மேலும், இதற்கு முன்பு ஒன்றிய அரசு ரூ.3000 வழங்கியவுடன் தான் மாநில அரசு தனது பங்களிப்பை வழங்கப்படும் என்ற நிலை மாறி ஒன்றிய அரசு காலதாமதமாக தனது பங்களிப்பு தொகையை வழங்கினாலும், மாநில அரசு தனது பங்கு தொகை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இனிமேல் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் தொகையில் காலதாமதம் இல்லாத வகையில் இந்த திட்டம் புதுவடிவம் பெற்றுள்ளது. ''
''ஒன்றிய அரசு முதல் பெண்குழந்தைக்கு ரூ.3000-மும், இரண்டாவது பெண் குழந்தைக்கு ரூ.6000-மும் தருகிறார்கள். இன்று டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 ஒன்றினைத்து புதுப்பித்து துவக்கி வைக்கப்பட்டு 1,06,766 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கிய 2006 முதல் இதுவரை 1,16,95,973 பயனாளிகளுக்கு ரூ.10,529.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ''
''பொதுமக்கள் யாருக்கேனும் விடுபட்டிக்கும் நிலை இருக்குமானால் உடனடியாக அந்தந்த மாவட்ட சுகாதார துணை இயக்குநர் அவர்களிடம் முறையிட்டு சரி செய்துக் கொள்ளலாம், அல்லது 104 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். ''
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications