அதிமுகவை அழிக்க அதிமுகவிலேயே நிறைய பேர் உள்ளார்கள்! வேறு யாரும் தேவையில்லை! அமைச்சர் மா.சு.சுளீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை முடக்க அதிமுகவிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை அழிக்க வெளியிலிருந்து எல்லாம் ஆட்கள் யாரும் வரத் தேவையில்லை என அக்கட்சியை நோக்கி கிண்டல் அடித்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

இதனிடையே முதலமைச்சர் டிஸ்சார்ஜ் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, மருத்துவமனையிலிருந்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனக் கூறிவிட்டார் அமைச்சர் மா.சு.

தியாகிகள் தினம்

தியாகிகள் தினம்

தமிழக அரசு சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தியாகிகள் தினத்தை பற்றியும் தியாகிகளுக்கு அரசு சார்பில் பெருமை சேர்க்கும் நிகழ்வுகள் பற்றியும் பேசினார்.

 காவேரி ஹாஸ்பிடல்

காவேரி ஹாஸ்பிடல்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை மற்றும் அவரது டிஸ்சார்ஜ் பற்றி செய்தியாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் குறித்த தகவலை காவேரி மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி வெளியிடும் எனக் கூறினார்.

அதிமுகவை அழிக்க

அதிமுகவை அழிக்க

மேற்கொண்டு அதைப்பற்றி பேசுவதை தவிர்த்து அங்கிருந்த புறப்பட முயன்றவரிடம் திமுக அதிமுகவை முடக்கப் பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டுகிறாரே, அதற்கு உங்கள் பதிலென்ன என்ன செய்தியாளர்கள் வினவினர். அதிமுகவை முடக்க அதிமுகவிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிமுகவை அழிக்க வெளியிலிருந்து எல்லாம் ஆட்கள் யாரும் வரத் தேவையில்லை என ஒரே போடாக போட்டார்.

திமுக மீது சாடல்

திமுக மீது சாடல்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவர்களுக்கு இப்படி ஒரு பதிலடியை கொடுத்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+