Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிதி கொடுத்தது ஏன்? அமைச்சர் விளக்கம்.. எடப்பாடி மீதும் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிதி உதவி அளிப்பது அவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்று சிலர் விமர்சித்த நிலையில் இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் நிதி உதவி வழங்கவில்லை என்றாலும் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாரயம் குடித்த பலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இன்று வரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Ma subramanian kallakurichi liquor death tamil nadu

எத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று சட்டசபையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் குற்றவாளிகள் அனைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு உதவித்தொகையையும் அறிவித்தார். பெற்றோரை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 5000 வரவு வைக்கப்படும் என்றும் இருப்புத்தொகையாக 5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோல், பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால், அந்த குழந்தைகளுக்கு வங்கி இருப்புத்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆந்திராவில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்துறையினர் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.

ஆனால் ஒருசிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்காக நிதி வழங்கப்படுகிறது என்று விமர்சித்தனர். நாம் தமிழர் கட்சி சீமான், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அதை விற்பனை செய்தவர்கள் மற்றும் இதில் குற்றம் இழைத்தவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும்,

மக்களுடைய வரிப்பணத்தை ஏன் கொடுக்கிறார்கள் என்றும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிதி உதவி அளிப்பது அவர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது என்றும் விமர்சித்தார். இதேபோல் தேமுதிகவிம் பிரேமலதா விஜயகாந்தும் நிதி கொடுத்து கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிக்க கூடாது என்று கூறியிந்தார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார். அவர் கூறியதாவது:-

கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஒரு திருநங்கை, 3 பெண்கள் அடங்குவர். உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று தலா ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி வரவழைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் இருந்த மருத்துவர்களோடு மொத்தம் 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அங்கு பணியில் இருந்தனர்.

ஒருசிலர் தயக்கத்தினால் ஆஸ்பத்திரிக்கு வராமல் இருந்தனர். இதனால் அவர்கள் நேர தாமதத்திற்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதுவும் உயிரிழப்புகள் அதிகமாக இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இப்படி கள்ளச்சாராயம் குடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வர தயக்கம் காட்டியவர்களையும் வீடு தேடி சென்று அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட்டன. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் நீதியரசர் கோகுல்தாஷின் தனி விசாரணை ஆனையத்தை அமைத்துள்ளார். யார் சொன்னதையும் எளிதில் கடந்துவிட முடியாது. குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. நிதி உதவி கொடுப்பதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நிதியுதவி தராவிட்டாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.

ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவர்கள் தானே. அதனால் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் விமர்சனம் வரத்தான் செய்யும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலன் கருதி தான் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்காக தான் இந்த நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+