மத சர்வாதிகார போக்கு.. பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களுக்கு தடையா? அமைச்சர் கண்டனம்
சென்னை: திண்டுக்கல் பழனி முருகன் கோயிலுக்கு இந்து மத நம்பிக்கை அல்லாதவர்கள் செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து இருக்கும் நிலையில்
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "பாரம்பரிய மரபுகள் பற்றி பெருமையாக பேசும் தமிழ் சமூகம் காலம் காலமாய் பின்பற்றி வரும் மரபுகளை சிதைக்கும் முயற்சியை வேடிக்கை பார்க்குமா?? வரலாறு நெடுக பலமுறை 'தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு' என்பது நடந்தேறி உள்ளது. அதன் நீட்சியே இந்த நடவடிக்கை. ஒரு காலத்தில் பண்டாரம் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பழனி தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் கோவிலில் அவர்களின் அர்ச்சகம் செய்யும் உரிமைகளே பறிக்கப்பட்டன.

தமிழில் அர்ச்சனைகள் செய்வதை மாற்றி சமஸ்கிருத அர்ச்சனையே விதியானது. சைவம், வைணவம், கௌமாரம், காணப்பதியம், சௌரம், சாக்தம் மற்றும் நாட்டார் வழக்கு தெய்வங்கள் வழிபாடு என்று பன்முகத் தன்மை கொண்ட தமிழர் வழிப்பாட்டு மரபுகளை ஒற்றை அடையாளத்தில் அடைத்து, இந்த சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு அடிப்பணியச் செய்தனர். கோவில் கருவறைக்குள் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று கொடிமரம் என்ற இந்த தடுப்புக்கான அளவுகோலும் அந்த வழிப்பாட்டு உரிமை மறுப்பின் நீட்சியே. இது தமிழரின் வழிப்பாட்டு ஜனநாயகத்துக்கு எதிரானது.

தமிழ் நாட்டில் பழனி முருகன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா என்பதெல்லாம் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான தளங்களாகவே இருந்திருக்கின்றன. இன்றளவும் தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையுடன் இவ் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருகின்றனர். இன்றும் இந்து அல்லாத தமிழக இளைஞர்கள் டிஎம் சௌந்தரராஜன் அவர்களின் முருகன் வழிப்பாட்டு பாடல்கள் விரும்பி கேட்பதும், பாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பாடி பரிசு பெறுவதும் அவர்களின் குடும்பத்தாலே கொண்டாடப்பட்டு வருகின்றன.
இது அனைத்து சமய தமிழர்களின் மத நல்லிணக்கத்தின் அடையாளம் ஆகும். ஆனால் இந்த 'கொடி மரம் தடுப்பு அளவுகோல்' நடவடிக்கை தமிழ் நாட்டின் உன்னதமான மரபை இல்லாமல் செய்து, மத சர்வாதிகார போக்கை இங்கு நுழைக்கிறது. ஆன்மிக தலங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன ஆனால் மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications