பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது... புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் அமைச்சர் மூர்த்தி!
சென்னை: பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதால் புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் இருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
தமிழக அரசின் பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பத்திரபதிவு மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு ரூ.2,325 கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் வருமாறு;

பதிவுத்துறை
பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

ரூ.8,000 கோடி வருவாய்
அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப் பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28.09.2022 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்கள். இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியை விட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பதிவுத்துறை வருவாயை அதிகரித்திருப்பதன் மூலம் துறை ரீதியாக தனது நிர்வாகத் திறமையையும், ஆளுமையையும் ஆட்சி மேலிடத்திற்கு வெளிப்படுத்திவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் அவர்.

அதிரடி ஆய்வு
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பதிவுத்துறை அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவதுடன் பொதுமக்களிடமும் குறைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். அமைச்சர் மூர்த்தியிடம் தென்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தை கண்டு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் திகைத்து நிற்கின்றனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கிப்ட் பத்திரம் பதிவில் "நோ கேஷ்" கண்டிஷன் தெரியுமா? ஒரே ஒரு தப்பு பண்ணா மொத்த ஆவணமும் டோட்டலா காலி












Click it and Unblock the Notifications