பெட்ரோல் போட கஷ்டமாக இருக்கும்.. அதனால் பெண்களுக்கு டூ வீலர் திட்டம் ரத்து: பெரியகருப்பன் விளக்கம்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய சூழலில் பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டத்தை தொடர்ந்தால் அது அவர்களுக்கு மேலும் சுமையை கொடுக்கும் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பெண்கள் கட்டணமின்றி அரசு நகரப் பேருந்துகளில் பயணிப்பதால் ஸ்கூட்டர் வாங்கும் ஆர்வமும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறினார்.
ஜெயலலிதாவால் அம்மா மகளிர் இருசக்கர வாகன மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணிக்கு செல்லும்
பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் வகையில் ஜெயலலிதாவால் அம்மா மகளிர் இருசக்கர வாகன திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் இந்த திட்டம் கவர்ச்சிகரமாக பார்க்கப்பட்டாலும் பின்னாளில் இந்த திட்டம் மீதான ஈர்ப்பும் ஆர்வமும் மகளிர் மத்தியில் குறையத் தொடங்கியது. காரணம் தினமும் விண்ணை முட்டும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஸ்கூட்டர்களை தவிர்க்க தொடங்கியதே ஆகும்.

பெட்ரோல் விலை
இந்நிலையில் இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் அளித்துள்ள விளக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய சூழலில் பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டத்தை தொடர்ந்தால் அது அவர்களுக்கு மேலும் சுமையை கொடுக்கும் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

கட்டணமின்றி பயணம்
மேலும், பெண்கள் கட்டணமின்றி அரசு நகரப் பேருந்துகளில் பயணிப்பதால் ஸ்கூட்டர் வாங்கும் ஆர்வமும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் என்ன காரணத்திற்காக இதை கூறினாரோ, ஆனால் அவர் கூறிய மேற்கூறிய இந்த விவகாரம் ஓரளவு உண்மை என்பது மட்டும் கவனிக்கத்தக்கது. அந்தளவு பெட்ரோல் விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு திட்டங்கள்
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும், மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டமும் இப்போது கைவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications