திமுக ஆட்சியில் 754 கோவில்களில் அன்னதானம்! அதிமுக ஆட்சியில் வெறும் 34! அமைச்சர் சேகர்பாபு தகவல்!
சென்னை: திமுக ஆட்சியில் தற்போது 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சியில் வெறும் 34 கோவில்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும், இதுமட்டுமல்லாமல் 341 கோவில்களில் உணவுகள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளதையும் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதத்தின் போது அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் நந்தகுமார், தனது தொகுதியில் உள்ள ரெங்கநாதர் கோவில், பள்ளிகொண்டான் கோவில்களில் அன்னதானம் திட்டம் தொடங்கப்படுமா என வினவினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மேற்கண்ட விவரங்களை கூறி அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பழனி கோயில்
அதைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என பழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிமுக ஆட்சியில் பழனி முருகன் கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க 70 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், இப்போது அந்தப்பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு 18 மாதங்களில் ரோப் கார் சேவை தொடங்கப்படும் எனக் கூறினார்.

மருதமலை கோவில்
இதேபோல் மருதமலை கோவிலிலும் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூணன் கோரிக்கை விடுத்தார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, மருதமலை முருகன் கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருப்பதை தாம் அறிவேன் என்றும் ஆனால் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனையில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

முக்கியத் தகவல்
இதனிடையே திமுக ஆட்சியில் தற்போது 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சியில் வெறும் 34 கோவில்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் சேகபாபு கூறியுள்ள இந்த தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications