"ஸ்டிரிக்ட்".. கரண்ட் பில் கட்டுவதற்கு இன்னொரு முறை டைம் தர முடியாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி கறார்
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது
சென்னை: ஏற்கனவே கரண்ட் பில் கட்டுவதற்கு போதுமான அளவு கால அவகாசம் தந்துவிட்டதால், மறுபடியும் அவகாசம் தர முடியாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..
தமிழ்நாட்டில் லாக்டவுன் அமலில் உள்ளது.. அதனால், எப்போது லாக்டவுன் போடப்பட்டதோ, அந்த தேதியில் இருந்து கரண்ட் பில் செலுத்த வேண்டியவர்கள் இன்று ஜுன் 15-ம் தேதி அதாவது இன்று வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் வழங்கியிருந்தது.
அதேபோல, ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்தாத உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான கூடுதல் வைப்புத் தொகையும் செலுத்த ஜுன் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

தொற்று
ஆனால், இப்படிப்பட்ட சூழலில்தான் மறுபடியும் தொற்று அதிகமாகிவிட்டது.. இதனால், மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வீடுகளில் கரண்ட் பில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.. அதற்கு பதிலாக 2019-ம் ஆண்டு மே மாத மின் கட்டணம் அல்லது நடப்பாண்டு மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தை உத்தேசமாக செலுத்தலாம் என்றும் இந்த கட்டணம் வரும் ஜூலை மாதம் சரியாக கணக்கிடப்பட்டு முறைபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கம்ப்யூட்டர்
ஆனால் மே 2019-ன் மின் கட்டணமே இம்மாத கட்டணமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.. மேலும் இது அதிகப்படியான கட்டணம் என்று பலரும் குற்றம்சாட்டினர்... இப்படிப்பட்ட சூழலில்தான், மின்சார வாரியம் புதிய முறையை கையிலெடுத்தது... அதன்படி, ஊரடங்கு காலத்தில் தங்கள் மீட்டரில் பதிவாகிய மின் பயன்பாட்டை எழுதியோ அல்லது போட்டோ எடுத்தோ வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு தெரிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

கரண்ட் பில்
எனினும், இது எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.. தங்களது கட்டணமும் எவ்வளவு என்று தெரியாமல் பலரும் குழம்பினர்.. எனவே, கரண்ட் பில் கட்டுவதற்கான கால அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது... ஏற்கனவே கடந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், மறுபடியும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டபடி கால அவகாசம் தரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தது.
Recommended Video

கறார்
ஆனால், கரண்ட் பில் செலுத்த இன்னொருமுறை கால அவகாசம் கிடையாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கறாராக சொல்லி விட்டார்.. ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் தந்துள்ளார். அதனால், பொதுமக்கள் தாமத கட்டணத்தை தவிர்க்கும் பொருட்டு மின் கட்டணத்தை இன்றே செலுத்தி விடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவகாசம்
அதாவது, 10.05.21 முதல் 24.05.21 வரையிலான காலத்தில் மின் கணக்கீடு செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மே 2019ம் ஆண்டில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டு தொகையாக கருதி செலுத்த வேண்டும். மே மாத கட்டணத்தை செலுத்தினால் அதிக கட்டணம் வருகிறது என்று நினைப்பவர்கள், மே மாதத்திற்கு முந்தைய ஏப்ரல் மாத மின் கட்டணத்தினை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications