மெரினாவுக்கு நிகராக திமுக தொண்டர் கடல்.. கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் பேரணியாக சென்று மரியாதை
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்று போற்றப்படும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் காலமானார். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இன்று அவரது 5 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக சென்னை காலை 7.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து இந்த பேரணி புறப்பட்டது. அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக முத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது. ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து சென்னை வாலாஜா சாலை வழியாக, முக ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதிப் பேரணி சென்றனர். அதை தொடர்ந்து காமராஜர் சாலைக்கு சென்ற
பேரணி, மெரினா கடற்கரையை ஒட்டி, அண்ணா நினைவிடம் அருகே அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் திமுக மூத்த தலைவர்கள் கருணாநிதி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். இதில், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளார்கள், தலைமைச்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச் சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணியினரும் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் அலைகடலென மக்கள் கூட்டம் திரண்ட நிலையில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். போக்குவரத்தும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications