வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கூட்டணிகள் நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில், மதிமுகவைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகள் தொடர்பாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மதிமுகவில் இருந்து விலகி பல ஆண்டுகளாக திமுகவுக்கு தாவ காத்திருக்கும் முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே மதிமுகவில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருந்தன. குறிப்பாக கட்சியின் முதன்மை செயலராக செயல்பட்டு வரும் துரை வைகோவின் மீது சில மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.

mk Stalin

இதன் காரணமாக பல முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து படிப்படியாக விலகினர். முன்னாள் மாநில நிர்வாகி பொடா அழகுசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சண்முகசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், முன்னாள் அவைத்தலைவர் எஸ். துரைசாமி உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகியிருந்தனர்.

மதிமுக

மொத்தம் 12 முக்கிய நிர்வாகிகள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி தனித்த நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். இதற்கு முன்பாக மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவும் கட்சியை விட்டு வெளியேறி, திராவிட வெற்றிக்கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால்மதிமுகவில் இருந்து விலகியவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த 12 அதிருப்தி நிர்வாகிகளும் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மதிமுக நிர்வாகிகள்

இதுதொடர்பாக திமுக தலைமைக்கு அவர்கள் கடிதம் அளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த நேரத்தில் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள மதிமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான். நீண்ட கால கூட்டணிக் கட்சித் தலைவரான வைகோவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்த விரும்பாத திமுக தலைமை, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்காமல் காத்திருக்க வைத்திருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதிமுக பொதுக்குழு

ஆனால் தற்போது அரசியல் சூழல் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் இனி வரும் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று துரை வைகோ ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திமுகவை ஆத்திரமடைய வைத்துள்ளது. மேலும், மதிமுககூட்டணியில் தொடருமா அல்லது தவெக கூட்டணியை தேர்வு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மு.க. ஸ்டாலின்

இதனால் , அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான திட்டங்களையும் திமுக தீட்டிவருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் உருவானால், அக்கட்சியில் இருந்து விலகி காத்திருக்கும் அதிருப்தி நிர்வாகிகளை திமுகவில் இணைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு தலைமை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் சாதகமான சிக்னல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வைகோ

மதிமுகவில் பல ஆண்டுகள் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தால், அது அரசியல் ரீதியாக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மதிமுகவின் பழைய வலிமையை மதிமுக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், பொதுக்குழு கூட்டத்தில் வைகோ எடுக்கும் முடிவுதான் அடுத்தகட்ட அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+