கையில் மநீம கட்சிச்சின்னம்... கண்டேன் சீதையை என ராமாயணத்தை மேற்கோள் காட்டிய கமல்
கண்டேன் சீதையை அப்படின்னும் பளிச்சுன்னு சொல்லுங்க என்று அனிதாவைப் பார்த்து சொன்ன கமல்
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவதற்காக வரும் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் பேசி செல்வார். இந்த வாரம் நேரடியாகவே தனது கட்சி சின்னத்தை கோட்டில் அணிந்து அதை அனைவரும் பார்க்கும் வகையில் கையை ஆட்டி ஆட்டி பேசினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை தனக்கான அரசியல் மேடையாகவே பயன்படுத்திவருகிறார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசிய கமல்ஹாசன், சொல்ல வேண்டியதை செய்தி தலைப்புச் செய்தி பளிச்சுன்னு சொல்லுங்க. பார்வையாளனாக சொல்கிறேன் என்று அனிதாவை பார்த்து சொன்னார்.

நாம் பேசும் விசயம் அனைவருக்கும் எளிதில் புரிய வேண்டும் என்று சொன்ன கமல்ஹாசன் ராமாயணத்தில் அனுமனை உதவிக்கு அழைத்தார். அனுமனுக்கு சொல்லின் செல்வன் என்ற பெயர் உண்டு. சீதையை இலங்கைக்கு தேடி போய் பார்த்துவிட்டு திரும்பும் அனுமன், ராமனிடம் முதலில் கண்டேன் சீதையை என்று சொன்னார். அந்த வார்த்தை ராமனுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு பேசிய கமல் தான் அணிந்திருந்த உடையில் தனது இரு கைகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் சின்னத்தை அணிந்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், கரும் ஊதா நிறத்தில் கோட் சூட் ஒன்றை அணிந்திருந்தார். அந்த சூட்டின் ஹாண்ட் ஸ்லீவில் தனது மக்கள் நீதி மய்ய கட்சியின் கொடியின் சின்னம் அச்சிடப்பட்டிருந்தது. அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கையை ஆட்டி ஆட்டி பேசினார்.
சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட கமல்ஹாசன், தனது பிரச்சாரத்தை பிக்பாஸ் மேடையிலும் ஆரம்பித்து விட்டார். எம்ஜிஆர் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியல் செய்தவர்கள்தான். சினிமாவை அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டனர். கட்சி, கொடி, சின்னத்தை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க சினிமாவை ஒரு களமாக பயன்படுத்தினர்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமல்ஹாசன். மக்கள் பிரச்னைகள் குறித்து ட்வீட் செய்து விட்டு மற்ற வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை தனக்கான அரசியல் மேடையாகவே பயன்படுத்திவருகிறார் என சொல்லலாம்.
நக்கலாகவும், காமெடியாகவும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் இடமாக பிக்பாஸ் மேடையை கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார். அங்கு ஒரு சில நேரங்களில் பொடி வைத்து பேசுவது டபுள் மீனிங்கில் உரையாடுவதும் கமலின் வாடிக்கை. இந்த வாரம் நேரடியாகவே தனது கட்சியின் சின்னத்தை முன்னிலைப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டார் கமல்ஹாசன்.
சொல்ல வேண்டிய விசயத்தை நச்சுன்னு மக்கள் மனதில் நங்கூரம் பாய்ச்சுவது போல சொல்ல வேண்டும் என்று சொன்ன கமல், தனது கட்சியின் சின்னத்தை வாயை விட்டு சொல்லாமலேயே எல்லோரும் பார்க்கும் படியில் உடையில் அணிந்து வந்து அசத்தி விட்டார். யார் கண்டது இனி வரும் காலத்தில் மாஸ்க் அணிந்து அதிலும் சின்னத்தோடு வந்து என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. நீங்க கலக்குங்க ஆண்டவரே என்கின்றனர் அவரது ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications