முடிவையே மாற்ற போவது இவர்தான்.. விருகம்பாக்கத்தின் கேம் சேஞ்சராகும் சினேகன்.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மிகப்பெரிய கேம் சேஞ்சராக சினேகன் உருவெடுத்து வருகிறார்.. தேர்தல் முடிவு எப்படி போகும் என்பதையே இவர்தான் தீர்மானிக்க போவதாக களநிலவரம் தெரிவிக்கிறது!.. சினேகன் குறித்து தெரிந்துகொள்ளும் முன் விருகம்பாக்கம் பற்றிய சின்ன களநிலவரம்!
தமிழக சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதி மிக முக்கியமான களமாக மாறியுள்ளது. இங்கு திமுக, அதிமுக இரண்டில் ஒரு கட்சிதான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. களநிலவரமும் இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவாகவே இருக்கிறது.
ஆனால் அங்குதான் பெரிய டிவிஸ்ட் காத்து இருக்கிறது. இரண்டு கட்சிக்கும் களநிலவரம் ஆதரவாக இருந்தாலும் கூட.. திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி.. யார் வெற்றிபெற்றாலும் 2000-3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏன்
கடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுகதான் வெற்றிபெற்றது. அதிமுக வேட்பாளர் விருகை ரவி 2333 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுகவின் தனசேகர் இங்கு இரண்டு தேர்தலில் அடுத்தடுத்து தோல்வி அடைந்தார். இதனால் தற்போது தனசேகருக்கு பதிலாக பிரபாகர் ராஜா களமிறங்கி உள்ளார்.

பிரபாகர் ராஜா
அதிமுக சார்பாக மீண்டும் ரவியே இறங்கியுள்ளார். இங்கு திமுக அதிமுக இடையே பெரும்பாலும் 2000-3000 வாக்குகள்தான் வித்தியாசமாக இருக்கும். ஏற்கனவே இங்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் திமுக தனசேகர் இருக்கிறார். இதனால் தேர்தலில் கடைசி கட்டத்தில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன.

மக்கள் நீதி மய்யம்
இப்படிப்பட்ட நிலையில்தான் இங்கு மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது. இவர்கள் யாருடைய வாக்குகளை பிரிக்கிறார்களோ அதை பொறுத்தே தேர்தல் முடிவு மாறும்.இங்குதான் சினேகன் முக்கியத்துவம் பெறுகிறார். இந்த விருகம்பாக்கம் தொகுதியில்தான் சினேகன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுகவை தவிர்த்து மக்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலமாக இருக்கும் வேட்பாளர் இவர்தான்.

கேம் சேஞ்சர்
இதனால் விருகம்பாக்கத்தில் மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள்தான் கேம் சேஞ்சர்களாக மாற போகிறார்கள். இவர் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதை தாண்டி .. இவர் குறைந்தது 5000 வாக்குகளை பெற்றாலும் கூட தேர்தல் முடிவுகள் மாறிவிடும். இதனால் சினேகன்தான் இங்கு திமுக அல்லது அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்க போகிறார்.

வெற்றி வாய்ப்பு
இவர் திமுகவின் வாக்கை பிரித்தால் அதிமுக வெற்றிபெறும்.. அதிமுகவின் வாக்கை பிரித்தால் திமுக வெற்றிபெறும். இவரின் கையில்தான் அதிமுக அல்லது திமுகவின் வெற்றியே இருக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இங்கு இரண்டு திராவிட கட்சியும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளன. அதே சமயம் வாக்குகளை பிரிப்பதை தாண்டி இவருக்கு வெற்றி வாய்ப்பும் அதிகம் உள்ளது .

வெற்றி வாய்ப்பு
இன்னொரு மாற்று வேண்டும் என்று கருதும் மக்கள் இவருக்கு அதிக ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இவர் வெற்றி பெறவும் கூட வாய்ப்புகள் உள்ளன. இவருக்கு பிரச்சாரத்தின் போது கிடைக்கும் வரவேற்பும் இந்த நம்பிக்கையை அளிக்கிறது. சினேகன் யாருடைய வாக்குகளை பிரிப்பார்..அல்லது இரண்டு கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தலில் வெற்றிபெறுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications