"நடிகை" உட்பட 20 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்.. அதிர வைத்த "ஜிம் நடிகர்".. பாய்ந்தது குண்டாஸ்
20 பெண்களை சீரழித்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
சென்னை: 20 பெண்களை நாசம் செய்த ஜிம் நடிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.. இந்த உத்தரவை கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியாக பிறப்பித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கிறார்.. பிகாம் படித்துள்ளார்... சின்ன வயது முதலே உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம்.
அதனால் ஜிம் பாடி ஆசையும், சிக்ஸ்பேக் மோகமும் சேர்ந்து கொண்டுவிட்டது.. ஒருகட்டத்தில் சினிமாவில் ஹீரோவாக ஆசைப்பட்டார்... அதனால் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.. சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஃபேஷன் ஷோக்கள்
அதனால் முழுக்க முழுக்க மாடலிங் துறையிலேயே முழு கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.. அடிக்கடி ஃபேஷன் ஷோக்களையும் சொந்தமாகவே நடத்தி வந்துள்ளார்.. அப்போதுதான் ஏராளமான இளம்பெண்களின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது... இதற்கு நடுவில், லாக்டவுன் போட்டுவிடவும், வீட்டிலிருந்தபடியே, சோஷியல் மீடியாவில் ஃபேஷன் ஷோக்களை தொடர்ந்துள்ளார்.. இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், ட்விட்டர்களிலேயே விழுந்து கிடந்துள்ளார்..

ஜிம் பாடி
அனைத்திலும் ஜிம் பாடி போட்டோக்கள், வீடியோக்களை அப்லோடு செய்தார். அதை பார்த்ததுமே, மாடலிங் துறையைச் சேர்ந்த பெண்கள் பலர், முகமது சையத்துடன் நட்பு வைக்க ஆரம்பித்தனர்.. சையதை பொறுத்தவரை வசதியான குடும்பம்.. எப்போதுமே சொகுசு காரில்தான் வெளியே வருவார்.. ஜிம்பாடியும், சொகுசு காரையும் பார்த்த சில பெண்கள், வலிய போய் சையத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர்.. அப்போதுதான் சையத் தன்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டினார்..

நடிகை யார்?
அந்த பெண்களை அழைத்து கொண்டு, பப்-களுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.. அவர்களுக்காக பணத்தை வாரி வாரி இறைத்து செலவு செய்துள்ளார்.. பிறகு மெல்ல காதலை வெளிப்படுத்துவார்.. இதுதான் எல்லா பெண்களிடமும் அவர் கையாண்ட டெக்னிக் ஆகும். இதையெல்லாம் நம்பி அந்த பெண்களும், சையத்துடன் ஜாலியாக இருந்துள்ளனர்.. அதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வைத்து கொள்வது சையத்தின் நம்பிக்கையாகும்.. இந்த விஷயத்தை வெளி உலகத்தக்கு கொண்டு வந்ததே ஒரு துணை நடிகைதான்..

ரெஸ்ட்டாரெண்ட்
அவரும் மாடலிங் துறையை சேர்ந்தவர்.. தி.நகரில் உள்ள பப்-க்கு வரும்படி இவருக்கு சையத் மெசேஜ் அனுப்பி உள்ளார்.. தவறுதலாக வேறு 2 பெண்களுக்கும் அந்த மெசேஜ் சென்றுவிட்டது.. இது தெரியாமல் மற்ற 2 பெண்களும் அந்த பப்-பில் வந்து காத்துள்ளனர். துணை நடிகையோடு பப்-புக்குள் நுழைந்த சையத்தை பார்த்ததும் 3 பெண்கள் உட்பட 4 பேருமே அதிர்ந்து விட்டனர். இப்படித்தான் சையத் சிக்கினார்..

3 பெண்கள்
3 பெண்களும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து புகார் அளித்ததுடன், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அப்போது, முகமது ஷயாத், தங்களுக்கு காதல் வலை வீசி, மணிக்கணக்கில், ஆபாச 'சாட்டிங்' செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். புகார் குறித்து, வேப்பேரி மகளிர் போலீசார் விசாரித்தனர்.

பலாத்காரம்
முகமது ஷயாத், கடந்த மார்ச் 24ல், தன்னுடன் பழகிய பெண் ஒருவரை மிரட்டி, வேப்பேரியில் உள்ள ஜிம்முக்கு வரச்சொல்லி பணம் பறிக்க முயன்றபோது போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.. புகார் தந்த மூன்று பெண்களின் போட்டோக்களை காண்பித்து, 'இவர்களை பாலியல் பலாத்காரம் செய்தாயா?' என்று கேட்டனர்.. இவர்கள் மட்டுமல்ல, இவர்களுடன் சேர்த்து, 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன் என்று சொல்லி போலீசாரை அதிர்ச்சியடை செய்தார் ஷயாத்.

வாக்குமூலம்
அதற்கு பிறகு, அவர் அளித்த வாக்குமூலம்தான், அதைவிட பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. "நான் அழகாக இருப்பதால் என்னை நான் ரசிக்க ஆரம்பித்தேன்... ஸ்கூல் படிக்கும்போதிருந்தே உடல் ரீதியாக உறவு வைக்க ஆசைப்பட்டேன்... கல்லூரி படிக்கும்போது ஜிம்பாடி வந்துவிட்டது.. மாடலிங் துறையில் என் அழகை கண்டு பல பெண்கள் மயங்கினர்... அவர்களுடன் நான் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்... என் காம வலையில் சிக்காத பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி படுக்கைக்கு அழைத்து வந்துவிடுவேன்.. ஒருவரும் தப்பவில்லை..

குண்டர் சட்டம்
என் அழகில் மயங்கிய பெண்கள் எனக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். இதையே ஒரு பிஸினசாக செய்யலாம் என்று நினைத்து இறங்கினேன்... இந்த 5 வருடங்களில் எனக்கு நிறைய பணம், இன்பம் கிடைத்தது" என்று அதிர வைத்தார்.. இதையடுத்து கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார்... இந்நிலையில், இவரை ஓராண்டு ஜாமீனில் வெளியே வராதபடி, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் தற்போது கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications